சிறை எதிரே குப்பை தொட்டியில் துப்பாக்கி பறிமுதல் - மதுரையில் பரபரப்பு....!
பாதுகாப்பு நிறைந்த சிறைவாசலில் எவ்வாறு துப்பாக்கி கொண்டுவரப்பட்டது என்ற அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை புதுஜெயில் ரோடு பகுதியில் உள்ள மதுரை மத்திய சிறை அமைந்துள்ளது. சிறைவாசலின் அருகே டி.ஐ.ஜி., வீடு அமைந்துள்ளது. அதன் அருகிலயே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டி இருந்துவந்துள்ளது.
#Madurai | மதுரை மத்திய சிறை எதிரே குப்பைத் தொட்டியில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில், இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
— Arunchinna (@iamarunchinna) August 2, 2022
Further reports to follow - @abpnadu#crime | #itraid | @crime @Naveenkumar2228 @elsim_king pic.twitter.com/xgNW21YZDL
இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இருவர் குப்பை தொட்டியை சுத்தம் செய்தபோது குப்பைத்தொட்டிக்குள் பையில் துப்பாக்கி ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் அருகில் உள்ள காவலர்களிடம் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் துப்பாக்கியை எடுத்துசென்று விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குப்பைத்தொட்டியில் கிடந்த துப்பாக்கி ஏர் கன் துப்பாக்கி வகையை சார்ந்தது எனவும் தெரியவந்துள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Crime : சிவகங்கை கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கு.. 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு..
இதனை தொடர்ந்து பாதுகாப்பு நிறைந்த சிறைவாசலில் எவ்வாறு துப்பாக்கி கொண்டுவரப்பட்டது என்ற அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர். கைதிகள் யாரும் கொண்டு வந்துள்ளனரா? இல்லை சாலையில் சென்றவர்கள் யாரும் துப்பாக்கியை வீசி சென்றுள்ளனரா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர், மத்திய சிறைவாசலில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கஞ்சா பயன்பாடு இருப்பதாக புகார் எழுந்தது. கஞ்சாவை சிறைக்குள் கொண்டு செல்ல முயன்ற பெண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரை மத்திய சிறை எதிரே குப்பைத் தொட்டியில் துப்பாக்கி பறிமுதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்