மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
நோயாளி தூக்கிட்டு தற்கொலை; மதுரை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
சர்க்கரை நோயினால் காலில் ஏற்பட்ட புண்ணின் அவதியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா.? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு ராஜாஜி மருத்துவமனை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் ஏறாளமானோர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். பல்வேறு விதமான முக்கிய நோய்களுக்கும், அறுவை சிகிச்சைகளும் சிறப்பு சிகிச்சைகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்க்கரை நோய்க்கு சிகிச்சை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சேர்ந்தவர் செல்வம் (62). இவர் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு காலில் புண் ஏற்பட்டு அதற்கு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். காலில் உள்ள புண்ணால் மிகவும் அவதிப்பட்டு வந்த செல்வம் நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஆண்கள் அறுவை சிகிச்சை அரங்கம் அமைந்துள்ள பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
தற்கொலைக்கான காரணம்
இந்த சம்பவம் குறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க, காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்க்கரை நோயினால் காலில் ஏற்பட்ட புண்ணின் அவதியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது வேறு ஏதும் காரணமா.? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் மற்றும் உள்ள நோயாளிகள் உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104 சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Amudha IAS: முன்னாள் உள்துறைச் செயலர் அமுதா ஐஏஎஸ்க்கு 2 கூடுதல் பொறுப்பு; என்னென்ன?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TN New Governor : ”தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார் ?’ தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட போகும் தமிழர் இவரா..?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion