மேலும் அறிய

ஆசிரமம் கட்டி தருவதாக ரூ. 4.65 கோடி மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது - மதுரை உயர்நீதிமன்றம்

பணம் கொடுத்து ஏமாந்த ராமதாஸ் தரப்பில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கூடிய மனுவை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

ஆன்மீக குரு என கூறி ஆசிரமம் கட்டி தருவதாக ரூ.4.65 கோடி மோசடி வழக்கை ரத்து செய்ய முடியாது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை சேர்ந்த ரவி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தன்மீது 4.65 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு தொடர்பு இல்லை எனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதேபோல் பணம் கொடுத்து ஏமாந்த ராமதாஸ் இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட போலீசாரிடம் இருந்து வேறு குற்றப் புலனாய்வு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் மனு தாக்கல் செய்துள்ள ரவி என்பவர் துபாயில் வசிக்கும் மருத்துவ தம்பதியரான ராமதாஸ் மற்றும் சுப்புராதேவி ஆகியோரிடம்  தன்னை ஆன்மீக குரு என அறிமுகப்படுத்தி சிவகங்கையில் ஆசிரமம் கட்டலாம் என ஆசை வார்த்தை கூறி அவர்களிடமிருந்து வங்கி மூலமாக 4.65 கோடி ரூபாய் கடந்த 2018 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். ஆனால், பணத்தை பெற்ற பின்பு அவர்களை ஏமாற்றி தலைமறைவாகி விட்டனர். இதன் அடிப்படையில் புகார்  பெறப்பட்டு ரவி உள்பட ஆறு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு முழு விசாரணை முடித்து சிவகங்கை மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என தெரிவித்தனர்.

இதனை பதிவு செய்த நீதிபதி முதல் தகவல் அறிக்கை மற்றும் போலீஸ் விசாரணையில் பண மோசடி நடந்ததற்கான முகாந்திரம் உள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார். அதேபோல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை முடித்து குற்ற பத்திரிகை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளதால் விசாரணையை வேறு குற்றப்பிரிவு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற முடியாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 


மற்றொரு வழக்கு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள முடிக்கரை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள முடிக்கரையைச் சேர்ந்த ரவி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள முடிக்கரை கிராமத்தில் உள்ள அய்யனார் மற்றும் முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரையில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை எனவே, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையில் தான் ஜல்லிகட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போன்ற போட்டிகளுக்கு அனுமதி வழங்க அரசாணை உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுதாரர் அரசை அணுகி உரிய நிவாரணம் தேடிக் கொள்ளலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Embed widget