மதுரை விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு
விமானநிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் துப்பாக்கியை ஒப்படைக்கும் போது எதிர்பாரதவிதமாக வெடித்ததால் பரபரப்பு
தென் மாவட்டங்களை மிக முக்கியமான விமான நிலையமாக பார்க்கப்படும் மதுரை விமான நிலையம், அவனியாபுரம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் மூலம் தினமும் 10க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கிறது. இந்த மத்திய அரசின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கீழ் இந்த விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது வழக்கம்.
#மதுரை விமானநிலையத்தில் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினரிடம் பணி முடிந்த பின் வழக்கம் போல் துப்பாக்கி ஒப்படைக்கும் போது எதார்த்தமாக துப்பாக்கி சுட்டுள்ளது.@iamarunchinna | @abpnadu #madurai| @MaduraiAirport @aaichnairport pic.twitter.com/YJHmihm2uK
— kavi athirai (@arunpothu92) July 12, 2022

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















