மேலும் அறிய

Keezhadi Excavation: கீழடி அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு

9 மாதங்களில் கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிட்ட பின்பு இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5765 அகழாய்வு பொருட்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

கீழடி தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு

கீழடி அகழாய்வு பணிகளை கண்காணிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் நியமிக்க வேண்டும், 2 கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை மாநில அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கு. வழக்கறிஞர் கனிமொழி மதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016 ஆண்டு பொதுநல மனு, “சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின்போது 5000க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலையில் திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு 3ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும் படியான கண்டுபிடிப்புகள் இல்லை என தெரிவித்தார். முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். இந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.

மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன்

எனவே கீழடி அகழாய்வு பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் நியமனம் செய்ய வேண்டும், மேலும் கீழடியில் நடைபெற்ற 2 கட்ட அகழாய்வில் 2200 ஆண்டு பழமையான 5000-த்துக்கும் அதிகமான பழங்கால பொருட்கள் மத்திய அரசிடம் உள்ளது. அதனை மீண்டும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும், மேலும் அங்கேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்க பூர்வாலா மற்றும் தனபால் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.ன்அப்போது வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜராகி, கீழடியில் மத்திய அரசு அகழய்வு செய்த மோது கிடைத்த 5000க்கும் மேற்பட்ட பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், கீழடி அகழாய்வு பணிகளை கண்காணித்து மேற்கொள்ள அதிகாரியாக அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமனம் செய்யவேண்டும் என வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பு

இதனையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2017ம் ஆண்டு கவுகாத்தி மாற்றம் செய்யப்பட்டு, அதன்பின்பு கோவா, பிறகு சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தென்னிந்திய கோவில்கள் தொல்லியல் கண்காணிப்பாளராக உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கீழடி 2 கட்ட அகழாய்வில் மொத்தம் 5765 பொருட்கள் கிடைத்தன. அவை அனைத்தும் இந்திய தொல்லியல் கண்காணிப்பாளர் சென்னை அலுவலகத்தில் உள்ளது. விரைவில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படும் என வாதிடப்பட்டது.

உத்தரவு 
இதனை பதிவு செய்த நீதிபதிகள், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் சென்னையில் பணியமர்த்தப்பட்டு உள்ளார். அதில் எந்த முடிவும் எடுக்க முடியாது.  மேலும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து மத்திய அரசு 9 மாதங்களில் கீழடியில் நடத்திய 2 கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட உள்ளது. 9 மாதங்களில் கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிட்ட பின்பு இந்தியதொல்லியல் துறையிடம் உள்ள 5765 அகழாய்வு பொருட்களை மத்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும், அதனை மாநில அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்Salem Drunkard News | தலைக்கேறிய  போதை வெறிவீட்டை சூறையாடிய வாலிபர்கள் சேலத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
ஒரே மேடையில் விஜய் - திருமா? எங்கு, எப்போது? புது ட்விஸ்ட்டை பார்க்குமா தமிழ்நாடு?
காஞ்சிபுரத்தை உலுக்கிய கொடூரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து - நடந்தது என்ன?
காஞ்சிபுரத்தை உலுக்கிய கொடூரம்.. துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து - நடந்தது என்ன?
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Diwali Special Bus: சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள் - ரெடி ஆகுங்க மக்களே..
Breaking News LIVE 2nd NOV:
Breaking News LIVE 2nd NOV: "இந்தியாவிலேயே தமிழ்நாடும், கேரளாவும்தான் முற்போக்கு மாநிலங்கள்” - துணை முதலமைச்சர் உதயநிதி
Seeman:
Seeman: "கூமுட்டை.. Very Wrong Bro" விஜய்யை தாறுமாறாக தாக்கிப் பேசிய சீமான்!
Embed widget