மேலும் அறிய

கீரனூர் சட்டவிரோத மணல் குவாரியை மூடக்கோரிய வழக்கு - மதுரை ஆட்சியர் பதில்தர உத்தரவு

’’அரசு அதிகாரிகள் சட்டவிரோத மணல் குவாரி நடத்துவதற்கு உதவியாக இருப்பது போல் தெரிகிறது என மனுவில் புகார்’’

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஐயப்பன்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில்," மேலூர் தாலுகா, சுண்ணாம்பூர் கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக தூத்திரி மற்றும் கீரனூர் பாசன குளங்கள் உள்ளன. பொது மக்களின் தேவைக்காக மட்டுமின்றி சுமார் 1000 ஏக்கர் அளவிலான விவசாய நிலங்களும் இந்த குளங்கள் மூலமாகவே பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில்  தனிநபர் ஒருவர் 3 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவில் கீரனூர் கிராமத்தில் மணல் குவாரியை நடத்தி வருகிறார். எட்டு இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் ஆழமாக மணல் எடுக்கப்பட்டு, 800 லாரிகள் மூலமாக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதற்கு முறையாக அனுமதியும் பெறப்படவில்லை.
 
கீரனூர் சட்டவிரோத மணல் குவாரியை மூடக்கோரிய வழக்கு - மதுரை ஆட்சியர் பதில்தர உத்தரவு
 
இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதிக ஆழத்திற்கு சென்றுவிட்டது. இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அரசு அதிகாரிகள் சட்டவிரோத மணல் குவாரி நடத்துவதற்கு உதவியாக இருப்பது போல் தெரிகிறது. ஆகவே மதுரை மாவட்டம் கீரனூர் கிராமத்தில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மணல் குவாரியை மூடவும், சட்ட விரோதமாக குவாரியை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
 
கீரனூர் சட்டவிரோத மணல் குவாரியை மூடக்கோரிய வழக்கு - மதுரை ஆட்சியர் பதில்தர உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்ததாகவும், அதன் அறிக்கையை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள் மாவட்ட ஆட்சியரும், மேலூர் வட்டாட்சியர் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தலைப்பு செய்திகள்

தமிழின் வேர் தேடி... தேவகோட்டை கல்லூரியில் தொல்லியல் பயிலரங்கம்!
தமிழின் வேர் தேடி... தேவகோட்டை கல்லூரியில் தொல்லியல் பயிலரங்கம்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்!
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
மதுரை திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை... இனி ஈசியான பயணம் !
மதுரை ரயில்வே: 110 கி.மீ வேக ரயில்கள்; பாதசாரிகள், கால்நடைகளுக்கு அவசர எச்சரிக்கை!
மதுரை ரயில்வே: 110 கி.மீ வேக ரயில்கள்; பாதசாரிகள், கால்நடைகளுக்கு அவசர எச்சரிக்கை!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Embed widget