மேலும் அறிய

தங்கத்துக்கு நிகராக மல்லிகைப் பூ..! கிலோ ரூ 5,000க்கு விற்பனை; அதிரடி விலை உயர்வு..! காரணம் என்ன?

தமிழ்நாட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ வரத்து குறைந்ததால் தேனி மாவட்ட ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ கிலோ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. வளர்பிறை முகூர்த்தத்தில் வரக்கூடிய கடைசி முகூர்த்தம் என்பதால் மக்களிடையே மல்லிகைப் பூவுக்கான தேவையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மல்லிகைப் பூ 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கனகாமரம் கிலோ ரூபாய் 1,500க்கும், முல்லைப் பூ கிலோ ரூபாய் 1,400க்கும், ஜாதிப் பூ கிலோ ரூபாய் 1,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

அதேபோல் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 1,500க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் மல்லிகைப் பூவின் வரத்து குறைந்து கொண்டே வருவதாலும், மக்களின் தேவை அதிகரிப்பதாலும், இன்று ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூபாய் 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், நேற்று ஒரு கிலோ பிச்சிப்பூ ரூபாய் 1,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல் மதுரையில், ஒரு கிலோ மதுரை மல்லி ரூபாய் 3 ஆயிரத்தில் இருந்து 3,500க்கும், ஒரு கிலோ பிச்சிப்பூ ரூபாய் 1,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ முல்லைப் பூ ரூபாய் 1,500க்கும், மாலை கட்ட பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு கிலோ சம்மங்கி  பூ கிலோ ரூபாய் 300க்கும், செண்டு மல்லிப்பூ கிலோ ரூபாய் 80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பட்டன் ரோஸ் கிலோ ரூபாய் 250க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 

பூ வாங்க மார்க்கெட்டுக்கு வரும் பொது மக்கள் ’பூவுக்கு மட்டும் விலையச் சொல்லுங்க, உங்க கடைக்கு யாரு விலைய கேட்டாங்க’ எனவும், ’பூவுக்கு விலையக் கேட்டா தங்கத்து விலைய சொல்லீட்டு இருக்கீங்க என்றும் கூறி வேறு வழியே இல்லாமல் ரூபாய் 5 ஆயிரம் கொடுத்து ஒரு கிலோ மல்லிகைப் பூவை வாங்கிச் செல்லுகின்றனர். 

தங்கத்துக்கு நிகராக மல்லிகை

தமிழ்நாட்டில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூபாய்  40,128க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5,016க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இன்றைக்கு ஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ மல்லிகைப் பூவும் சரிநிகரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து  ரூ. 40,128 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4 குறைந்து  ரூ.5,016 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,344  ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5,418  ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் வெள்ளி விலை ஒரு ரூபாய் 60 காசுகள் உயர்ந்து ரூ. 70.60 ஆக விற்பனையாகிறது.  பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.71,600ஆக விற்பனையாகிறது. சென்னையில் நேற்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,160 ஆகவும்  தங்கம் கிராமுக்கு  ரூ.5,020 ஆகவும் விற்பனையானது.

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget