மேலும் அறிய
Advertisement
தென் மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்...!
’’தனது 2 வயது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு பள்ளித் தோழியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 24 வயது பெண் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தொடரப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது’’
1. ராமநாதபுரம், மாவட்டம் திருவாடனை அருகே நர்ஸ் வேலைக்கு போலி பணி நியமன உத்தரவு வழங்கி 3 லட்சம் மோசடி செய்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மீது புகார்
2. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிச்சாத்த நல்லுார் ஊராட்சியில் மாரி என்பவருக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியில் இறந்த நிலையில் எலி இருந்ததால் பரபரப்பு
3. தனது 2 வயது குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு பள்ளித் தோழியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 24 வயது பெண் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தொடரப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்துள்ளது
4. 2021ஆம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற காளைக்கு கார், சான்றிதழை வழங்கக் கோரிய வழக்கில் மனுதாரரின் மனுவை ஆறு வாரங்களுக்குள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
5. தேனி ராணுவ பணிக்கு சென்றவர் 14 ஆண்டுகளாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரை கண்டுபிடித்துத்தர கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம் அவரது பெற்றோர் மனு.
6. சிவகங்கை மாவட்ட ஊராட்சிகளில் ரூர்பன் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ஆட்டோக்களை அந்தந்த ஊராட்சிகளின் ஊராட்சித் தலைவர்களே பினாமி பெயரில் இயக்குவதாகப் புகார்.
7. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கிருஷ்ணன் வேட்டை சினிமா பாணியில் இரிடியம் இருப்பதாக கூறி பழைய பித்தளை குடம், செம்பு, கூஜாவை விற்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.
8. துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஒரு தலைக்காதல் நிறைவேறாததால் டிவி மெக்கானிக்கை தலை துண்டித்து கொலை செய்த வாலிபர் கைது.
9. 'மதுரை மாவட்ட போலீசார் கட்டாயம் 'சீட்' பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும்,' என, எஸ்.பி., பாஸ்கரன் உத்தரவு.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 26 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75041-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 24 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க - தீபாவளியை தித்திக்க வைக்கும் குடிசைத்தொழில் செட்டிநாடு ஸ்நாக்ஸ் ! ஸ்பெஷல் என்ன தெரியுமா?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion