மேலும் அறிய
Advertisement
கோயில் கட்டியதற்கு ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால், அவர்கள் தான் முட்டாள்கள் : தயாநிதிமாறன் எம்.பி.,
"மோடி வரும் போதெல்லாம் தமிழ் மீது காதல் கொள்கிறார். இதே போல் தான் கேரளா, கர்நாடகாவிலும் கூறுகிறார்"
பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டியதற்கு ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் தான் முட்டாள்கள் - மதுரையில் தயாநிதி மாறன் பேச்சு.
கோழி கூவுவதுபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது மொழியில் பேசி வாக்குகளை களவாட பார்க்கிறார். - தயாநிதி மாறன் காட்டம்
நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் தமிழக முதல்வரின் 71- வது பிறந்தாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் - தயாநிதிமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்...,” 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மாபெரும் புரட்சியை செய்துள்ளனர் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டில் நான்காவது வளர்ச்சி நகரம் மதுரை
கொரோனா காலத்தில் மற்ற மாநிலத்தில் முதல்வர்கள் வெளியேவே வரவில்லை ஆனால் தமிழக முதல்வர் கொரோனா வார்டிற்குள்ளே சென்று நலம் விசாரித்தார். தமிழ்நாட்டில் நான்காவது வளர்ச்சி நகரமாக மதுரை உள்ளது. வீர வசந்த ராயர் மண்டபம் 18 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. பாஜக வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திசை திருப்பப்படுகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. மோடி வரும் போதெல்லாம் தமிழ் மீது காதல் கொள்கிறார். இதே போல் தான் கேரளா, கர்நாடகாவிலும் கூறுகிறார்.
தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை
கோழி கூவுவது போல் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது மொழியில் பேசி வாக்குகளை களவாட பார்க்கிறார்.
சமஸ்கிருதனுக்கு ஒரு ஆண்டுக்கு 1500 கோடி செலவு செய்கின்றனர். ஆனால் தமிழுக்கு வெறும் 28 கோடி தான் ஒதுக்கி உள்ளனர். இந்தியாவில் 80 சதவீத துறைமுகம் தனியாரிடம் உள்ளது. அதுவும் அதானி இடம் உள்ளது., தமிழ்நாடு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை. தமிழகம் அந்த மோடி வெள்ள பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்றாரா இல்லையே. இப்போது பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டி உள்ளனர் இதற்காக ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தார்கள் என்றால் அவர்கள் முட்டாள்கள்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தொழில்முனைவோர் தங்கள் திறனை விரிவுபடுத்த வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Poha Vada: மொறு மொறு அவல் வடை.. இப்படி செய்து பாருங்க சுவை சூப்பரா இருக்கும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion