மேலும் அறிய
Advertisement
மேகமலை வன பகுதிக்குள் மரம் வெட்ட யாரையும் அனுமதிக்க கூடாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மரங்கள் கடத்துவதற்கு உதவி புரிந்த வனத்துறை அதிகாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.
மேகமலை வனப்பகுதியில் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய வழக்கில், மரங்கள் வெட்டுவது சட்டவிரோதம். இது காடுகளை அழிப்பதுடன், சுற்றுச்சூழலின் சமநிலையை பாதிக்கிறது. இது மண் அரிப்பிற்கு காரணமாகின்றன என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேனியைச் சேர்ந்த ஜெயபால், என்பவர் தாக்கல் செய்த மனு மேகமலை வனப்பகுதியில் ஏராளமான விலை உயர்ந்த மரங்கள் வெட்டி கடத்தப் படுகிறது. வனத்துறை அதிகாரிகளின் துணையுடன் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2013 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டுவது சட்டவிரோதம். இது காடுகளை அழிப்பதுடன், சுற்றுச்சூழலின் சமநிலையை பாதிக்கிறது. இது மண் அரிப் பிற்கு காரணமாகின்றன. விலங்குகளின் வாழ்விடம் பாதிப்பதுடன், பல்லு யிர் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாகின்றன. இவை வனத்திற் குள்ளும், வனத்தை ஒட்டியும் வசிப்பவர்களால் ஏற்படுகின்றன. மரங்கள் வெட்டப்பட்டு வெண்ணியாறு எஸ்டேட்டிற்கு கொண்டு செல்லப் பட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மேகமலை வனக்காப்பாளரால் தனியார் எஸ்டேட் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டுமென மண்டல வனச்சரகருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆய்வில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டது உறுதி செய்யப் பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வன அதிகாரி சஸ்பெண்ட் ஆகியுள்ளார். ஆனால், விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வில்லை. எஸ்டேட் நிறுவனத்தினர் அனுமதியின்றி 114 மரங்களை வெட்டியது தொடர்பான வழக்கு உத்தமபாளையம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மரங்கள் வெட்டுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் தவறிவிட்டனர். முறையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் மரங்கள் வெட்டியதை தவிர்த்தி ருக்கலாம். எனவே, வனத்துறை அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை மற்றும் நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். என்றும் மேகமலை வன பகுதிக்குள் மரத்தை யாரும் வெட்ட அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டு விசாரணையை 6 வாரம் தள்ளி வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion