தேனியில் கொட்டித்தீர்த்த கனமழை; சாலையெங்கும் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம்
தேனி பழைய பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவிப்பு.
தேனி பழைய பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழை நீரை தேனி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு செய்தது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் தேனி நகர் பகுதியில் முறையாக பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் மலைக்காலங்களில் போது சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் தேனி நகராட்சி நிர்வாகத்திடம் மழைநீர் சாலையில் தேங்கி நிற்காமல் நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்போக்கில் தேனி நகராட்சி நிர்வாகம் இருந்து வந்த நிலையில், தேனி மற்றும் அதை சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று நண்பகல் 2 மணி அளவில் இருண்ட மேக மூட்டத்துடன் கனமழை பெய்ய துவங்கியது. இந்த கனமழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் தேனி பகுதியில் வெப்பம் தணிந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி பொதுமக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த மழை காரணமாக மானாவாரி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்த இந்த மழை காரணமாக தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை, பெரியகுளம் சந்தை சாலை பகுதிகளில் மழை நீர் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பள்ளி முடிந்து செல்லும் மாணவ, மாணவியர்கள் பேருந்து பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். நீண்ட காலமாக தேனி பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் மழை நீர் வடிகால் முறைப்படி அமைக்காததால் மழைநீர் வடிந்து செல்லாமல் தேங்கி நின்று வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக பழைய பேருந்து நிலையம் சிறிய மழை பெய்தால் கூட முடங்கும் நிலையில் உள்ளது. தேனி நகராட்சி நிர்வாக அதிகாரிகள் அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாலும் தேனி நகர் பகுதியில் சாலையில் மழை நீர் தேங்காமல் வரும் காலங்களில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மழையின் நீர் வடிகால் முறைப்படி அமைத்து மழை தண்ணீர் தேங்காத வகையில் முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி வணிகர்களும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.