மேலும் அறிய

Gandhi Temple Cumbum: மகாத்மா காந்திக்கு கோயில்.. இன்று சிறப்பு வழிபாடு: தேனி கிராமத்தின் சுவாரசியக் கதை இதுதான்!

இந்திய நாட்டின் மகாத்மா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஆலயத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திரு உருவ சிலையை வைத்து வழிபடும் கிராம மக்கள்.

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காந்தி கோயிலில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்டத்தில் அகிம்சை முறையில் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த, இந்திய நாட்டின் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு உலகின் பல இடங்களில் நினைவு மண்டபங்களும், சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் காந்திஜிக்கு கோயில் கட்டிய பெருமை தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டியை சேரும்.

Gandhi Jayanti 2023: காந்தியின் 154வது பிறந்தநாள்: நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை..!

Gandhi Temple Cumbum: மகாத்மா காந்திக்கு கோயில்.. இன்று சிறப்பு வழிபாடு: தேனி கிராமத்தின் சுவாரசியக் கதை இதுதான்!

குறிப்பாக காந்தி ஜெயந்தியை விழாவாக  இவ்வூர் மக்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. சுதந்திர போராட்ட களத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசியப் படையில் இருந்த சோமநாதன் சின்னியகவுடர், வெங்கடாசல செட்டியார், நாராயண பண்டிதர் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற காந்தியவாதிகள் நூற்றுக்கணக்காணவர்களைக் கொண்ட ஊர் காமயகவுண்டன்பட்டி.

அதேபோல சுதந்திரத்துக்கு பாடுபட்ட முன்னாள் எம்.பி., கே. சக்திவேல் கவுடர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.கே. பாண்டியராஜ், பரமசிவத் தேவர், கிருஷ்ணசாமி, சுருளியாண்டி ஆசாரி, தொட்டப்பனு, வீராச்சாமி நாயுடு போன்றோரும் காமயகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

Thalapathy 68 Update : தளபதி 68 படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்.. விஜய் படத்தின் புது அப்டேட்ஸ் இங்கே!

Gandhi Temple Cumbum: மகாத்மா காந்திக்கு கோயில்.. இன்று சிறப்பு வழிபாடு: தேனி கிராமத்தின் சுவாரசியக் கதை இதுதான்!

காந்திஜியின் மறைவுக்கு பின்பு அவரது அஸ்தி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள புனித நதிகளிலும் புண்ணிய ஸ்தலங்களில் கரைக்கப்பட்டபோது, அஸ்தியின் ஒரு பகுதி காமயகவுண்டன்பட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., சக்திவடிவேல் கவுடர், என்.கே. ராமராஜ், என்.கே. பாண்டியராஜ் ஆகியோர் சேர்ந்து, காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த கம்பம் சாலையில், பொதுமக்கள் வழிபடும் வகையில் மகாத்மா காந்திக்கு கோயில் எழுப்பினர்.

Trains Cancelled: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி மக்களே! இதை தெரிஞ்சிட்டு போங்க! இன்று மட்டும் 41 புறநகர் ரயில்கள் ரத்து: எங்கெல்லாம்?

இந்தக் காந்தி கோயிலில் உயர்ந்த கோபுரத்துடன் 6 அடி உயரத்தில் காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து, 1985 இல் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இக் கோயிலை திறந்து வைத்தார். கோயில் வளாகத்தில் காந்தி இறந்த அன்று நடைபெற்ற ஊர்வலக் காட்சிகளின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Gandhi Temple Cumbum: மகாத்மா காந்திக்கு கோயில்.. இன்று சிறப்பு வழிபாடு: தேனி கிராமத்தின் சுவாரசியக் கதை இதுதான்!

இக்கோயிலில், காந்தி பிறந்த நாள், நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய தேசத் தலைவர்கள் பிறந்த நாளில் சிறப்புப் பூஜைகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. காந்தி ஜெயந்தி அன்று மட்டுமல்லாமல் குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று இந்த கோவிலில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget