மேலும் அறிய

கேரளாவுக்கு அடித்த ஜாக்பாட்... விரைவில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை

கேரளா மாநிலத்திற்கு தான் நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ரயில்வே திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு இந்த முதல் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த ஆண்டுக்குள் மொத்தம் 10 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகம் செய்ய இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது. இதில் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை தெற்கு ரயில்வேயில் கேரளாவில் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூருக்கு இந்த முதல் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.


கேரளாவுக்கு அடித்த ஜாக்பாட்... விரைவில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை

பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு ரயில்களில் புதுப்புது அப்டேட்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. அந்த அடிப்படையில் பல்வேறு  வசதிகள் நிறைந்த வந்தே பாரத் ரயில்களை கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில்வே அறிமுகம் செய்தது. வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 136 வந்தே பாரத் ரயில்கள் மூலம் நாடு முழுவதும் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கூட 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் டூ மைசூர், கோவை டூ விஜயவாடா, எழும்பூரில் டூ நெல்லை மற்றும் எழும்பூர் டூ நாகர்கோவில் என 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்சேவை துவக்கப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து குமரி வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கூட படுக்கை வசதி இல்லாதது பயணிகளுக்கும் ஏமாற்றத்தையே கொடுத்தது.


கேரளாவுக்கு அடித்த ஜாக்பாட்... விரைவில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை

இந்த நிலையில் தான் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டது. இதற்காக அதி நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப்பில் நடந்து வந்தது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதில் 180 கிமீ வேகத்தில் இந்த ரயில்கள் இயக்கி சோதனை செய்யப்பட்டது. சோதனை ஓட்டமும் வெற்றி பெற்ற நிலையில் வந்தே பாரத் ரயில் விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என பயணிகள் எதிர்பார்த்தனர். அதேபோலவே இந்த ஆண்டுக்குள் மொத்தம் 10 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று ரயில்வே தெரிவித்து இருந்தது. மொத்தம் 10 ரூட்கள் என்பதால், தெற்கு ரயில்வேயில் எத்தனை வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் சென்னை டூ குமரிக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படுமா? என்றும் பயணிகள் எதிர்பார்த்தனர். இந்த வழித்தடம் பரிசீலனையில் இருக்கிறது என்றும் ஆனால் எப்போது இயக்கப்படும் என்பதை ரயில்வே பின்னர் அறிவிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்பதை ரயில்வே தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்திற்கு தான் நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ரயில்வே திட்டமிட்டுள்ளது.


கேரளாவுக்கு அடித்த ஜாக்பாட்... விரைவில் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை

தெற்கு ரயில்வே சார்பில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து இந்த முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் கேரள மாநிலத்திற்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்றே சொல்லலாம். கேரள ரயில் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எப்போது இயக்கப்படும்? என்ற தகவல் வெளியாகவில்லை. திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். 823 பயணிகள் பயணம் செய்ய முடியும். ஏசி மூன்றடுக்கு படுக்கைகள் கொண்ட 11 பெட்டிகளும், இரண்டு அடுக்கு படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள், ஒரு முதல் வகுப்பு பெட்டி இருக்கும்.

தற்போது கேரளாவில் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூர் சென்ட்ரல் (வண்டி எண் 20632 ), திருவனந்தபுரம் சென்ட்ரல் - காசர்கோடு (20634), மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் (20631), மற்றும் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் (20633) வரை என 4 ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில், அவசர காலங்களில் பயணிகள், ரயில் மேலாளர், லோகோ பைலட் இடையேயான தகவல் தொடர்புக்கான அவசரமாக பேசுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தீ பாதுகாப்பு கருவிகள், அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள், செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, செக்யூரிட்டி கேமரா, பயோ டாய்லட் ஆகிய வசதிக்ளும் உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு படுக்கைகள், டாய்லட்கள், சென்சார் வசதி கொண்ட கதவுகள், தானியங்கி வெளிப்புற கதவுகள் என பல வசதிகள் உள்ளது.

தலைப்பு செய்திகள்

வேலை வேண்டுமா? விருதுநகரில் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 17!
வேலை வேண்டுமா? விருதுநகரில் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 17!
வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
வெள்ளைக்காளி தாயார் பரபரப்பு புகார்: இன்ஸ்டாகிராம் அவதூறால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறி!
மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரையில் இனி நெரிசல் இல்லாத பயணம்.... அவுட்டர் ரிங்ரோடு திறப்பு !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
Embed widget