மேலும் அறிய
ரயிலில் இனி இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க... 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கலாம் !
பயணிகள் தங்கள் சொந்த பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என மதுரை கோட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரயில்வே போலீஸ் சோதனை
Source : whatsapp
ரயில்களில் தீ விபத்துகளை தவிர்க்க பட்டாசு கொண்டு செல்ல தடை ரயில்வே பாதுகாப்பு படை தீவிர சோதனை.
தீபாவளி பண்டிகையை பொது மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
நாடு முழுவதும் நவம்பர் எட்டாம் தேதி அன்று தீபாவளி பண்டிகையை பொது மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். இதற்காக பட்டாசுகளை ரயில் மூலம் எடுத்துச் சென்றால் தீ விபத்து ஏற்பட்டு பயணிகளுக்கு பெருத்த அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்ல ஏற்கனவே தடை அமுலில் உள்ளது. இந்தத் தடையை மீறி ரயில்களில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு உரிய தண்டனை வழங்க மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்களில் தீவிர சோதனைகளை செய்து வருகிறார்கள்.
நெரிசல் மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தீ விபத்து அதை தொடர்ந்து ஏற்படும் நெரிசல் மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலைய நடைமேடைகள், காத்திருப்பு அறைகள், பார்சல் பதிவு அலுவலகம் மற்றும் ரயில்கள் ஆகியவற்றில் தீவிர சோதனை செய்து வருகிறார்கள். மேலும் பயணிகளிடம் பட்டாசு, மண்ணெண்ணெய், எரிவாயு உருளைகள், பெட்ரோல், அமிலங்கள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயில்களில் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார்கள்.
மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது கடும் அபராதம்
இதை மீறி ரயில்களில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 164 -ன் படி மூன்று ஆண்டு சிறை தண்டனை அல்லது கடும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே பயணிகள் தங்கள் சொந்த பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என மதுரை கோட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















