மேலும் அறிய
Advertisement
தமிழகத்தின் அகழ்வாராய்ச்சி பணிகள் தமிழர்களின் அடையாளமாக திகழும் - அமைச்சர் தங்கம் தென்னரசு
பேராசியர்கள் உதவியுடன் இந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து தமிழகத்தில் நடை பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் பேச்சு
தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் தமிழர்களின் அடையாளமாக திகழும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் பேச்சு
முத்தமிழறிஞர் கலைஞர் பற்றிய தேசிய கருத்தரங்கம் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் இருநாட்களாக நடைபெற உள்ளதை முன்னிட்டு அதன் தொடக்க விழா இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வணிவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்று தொடங்கிவைத்தனர்.
#madurai | தமிழகத்தில் நடைபெறும் தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் தமிழர்களின் அடையாளமாக திகழும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மதுரையில் பேச்சு.
— arunchinna (@arunreporter92) November 22, 2023
Further reports to follow - @abpnadu@TThenarasu | @LPRABHAKARANPR3 | @abpmajhatv | @city_madurai @Yogesh_DMK | @k_for_krish pic.twitter.com/mljYt5bIiF
பின்னர் மேடையில் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, "கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கல்வெட்டுகள் தமிழர் பாரம்பரியம் குறித்து பல ஆய்வுகளை நடத்தி திறம்பட காட்டியுள்ளார். கடலுக்கு அடியில் தொல்லியல் துறை சார்பில் ஆராய்ச்சி செய்ய கலைஞர் 50 ஆண்டுகளுக்கு முன்னே திட்டமிட்டார். தஞ்சையில் மிகப்பெரிய கண்காட்சியை முன்பு நடத்தினோம். கும்பகோணத்தில் கோவிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் சோழர் ஆட்சி காலத்தில் இருந்தது என்று கூறினோம்.
அதற்கு அப்போதைய முதல்வர் கலைஞர் அது கண்காட்சியாக தான் இருந்தது. ஆனால் அதனை நான் வாசித்து மகிழ்ந்துள்ளேன் என கலைஞர் பேசினார். இந்த கருத்தரங்கு இங்கு நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. தொல்லியல் வரலாற்றில் மிகுந்த ஆர்வமாக உள்ளவர் கருணாநிதி. பாண்டிய நாட்டில் பல தொல்லியல் பொருட்கள் அதிகம் கிடைக்கும். அத்தகைய தொல்லியல் கருத்தரங்கம் மதுரையில் நடைபெறுவது மகிழச்சி. நமது தமிழக முதல்வர் அகழ்வாராய்ச்சிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தமிழ் பண்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அகழ்வாராய்ச்சிப் பணிகள் திகழும் தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் அமையும் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், பேராசியர்கள் உதவியுடன் இந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து தமிழகத்தில் நடை பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் ‘ - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ’ - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion