மேலும் அறிய
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஜனவரி 20 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு துவங்குகிறது.

ரயில் போக்குவரத்து
கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில் நிலையங்கள் இடையே தற்போது ஒரு வாராந்திர சிறப்பு ரயில் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த ரயில்கள் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை மட்டும் இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை பயணிகளின் வசதிக்காக பிப்ரவரி 25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (06035) பிப்ரவரி 04, 11, 18, 25 ஆகிய சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 01.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 05.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (06036) பிப்ரவரி 05, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 06.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஜனவரி 20 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு துவங்குகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Palani Kumbabishekam: பழனி கோவில் கும்பாபிஷேக விழா: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்; மாலை வேள்விச்சாலை நிகழ்ச்சிகள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















