மேலும் அறிய

Madurai: அமலாக்கத்துறையின் ரெய்டு டிரைலர் தான், மெயின் பிக்சர் விரைவில் - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை

குடிகாரர்களை குடிகார்கள் என அழைக்க கூடாது என அமைச்சர் முத்துச்சாமி சொல்கிறார். குடிகாரர்களை மதுத்தியாகிகள் என அழைக்கலாம் - செல்லூர் ராஜூ கிண்டல்.

மதுரை பெத்தானியாபுரத்தில் தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில் "முதல்வர் ஸ்டாலினுக்கு விலைவாசி உயர்வு, ஊழல் அமைச்சர்களை கட்டுப்படுத்த தெரியவில்லை, பொன்முடி மீதுள்ள ஊழலை அமலாக்கத்துறை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் ரெய்டு டிரைலர் தான், மெயின் பிக்சர் விரைவில் வரவுள்ளது. தி.மு.கவின் 30 ஆயிரம் கோடி ஊழலால் விரைவில் தி.மு.க., ஆட்சி வீட்டுக்கு போகும்.



Madurai: அமலாக்கத்துறையின் ரெய்டு டிரைலர் தான், மெயின் பிக்சர் விரைவில் - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
 
டெல்லி கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றதால் அதிமுக தேசிய நீரோட்டத்தில் இணைத்து உள்ளார். தமிழகத்திற்கு அ.தி.மு.கவால் அங்கீகாரமும், தி.மு.கவால் அவமானமும் ஏற்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் மேகதாது விவகாரம் குறித்து பேசவில்லை, தமிழகத்தில் 20 நாட்களில் 25 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் கலைஞர் வரலாற்றை படிக்க வேண்டும் என ரகசிய உத்தரவை திமுக அரசு பிறப்பித்துள்ளது, நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி ஜீவாதார உரிமையை நிலை நாட்டினார். எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தால் திமுக அரசை கண்டித்து தினம் தினம் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்" என பேசினார்.

Madurai: அமலாக்கத்துறையின் ரெய்டு டிரைலர் தான், மெயின் பிக்சர் விரைவில் - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
 
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில் "ஆண்டிகள் ஒன்று சேர்ந்து மடம் கட்டியது போல எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மடம் கட்டி வருகிறார்கள், 26 கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அளவில் முடிவுகள் எடுக்கவில்லை. கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என முடிவு எடுக்க முடியவில்லை. எதிர்கட்சிகள் கூட்டணி நெல்லிக்காய் மூடை கூட்டணி, சரிந்து ஒடி விடும், திமுக கூட்டணி கட்சிகள் ஒன்று, இரண்டு சீட்டுக்காக வாய் மூடி மவுனம் காத்து வருகிறார்கள். தமிழக அமைச்சர்கள் எப்போது ரெய்டு வரும் என தூக்கமில்லாமல் தவித்து வருகிறார்கள். அ.தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் வைத்திருக்கப்பட்டு இருந்தது. கலைஞர் உரிமைத் தொகை வழங்குவதை வரவேற்கிறேன். ஆனால் அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வால் மாதம் 10 ஆயிரம் கூடுதலாக தேவைபடுகிறது. ஒவ்வொரு குடும்ப தலைவிக்கு திமுக 5 ஆயிரம் கொடுத்தாலும் பெண்கள் திமுகவிற்கு வாக்கு அளிக்க மாட்டார்கள்.

Madurai: அமலாக்கத்துறையின் ரெய்டு டிரைலர் தான், மெயின் பிக்சர் விரைவில் - ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை
 
திமுக அரசு பேசுவது ஒன்று, செயல்படுத்துவது ஒன்று, குடிகாரர்களை குடிகார்கள் என அழைக்க கூடாது என அமைச்சர் முத்துச்சாமி சொல்கிறார். குடிகாரர்களை மதுத்தியாகிகள் என அழைக்கலாம். முதல்வர் ஸ்டாலின் வடிவேலின் சுநா.பானா கேரக்டர் போல வெளியே பேட்டி கொடுக்கிறார். முதல்வர் ஸ்டாலினின் பில்டிங் ஸ்டார்ங், பேஸ்மட் வீக், ஊழலுக்காக கலைஞர் வழியில் ஸ்டாலின் ஆட்சி கலைக்கப்படும்" என கூறினார்.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகர் 2026-27: ரூ.37,959 கோடி கடன் திட்டம் - மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகரில் தேசிய குடற்புழு நீக்க நாள்: 7 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு ஆரோக்கிய மாத்திரைகள்!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
விருதுநகர்: சதுரகிரி ஆடி அமாவாசை; 6 மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget