மேலும் அறிய

திமுக எம்.பி., எம்.எல்.ஏ மேடையில் மோதல் ! மன்னிப்பு கேட்க போஸ்டர்,திமுக-வில் வெடித்த உட்கட்சி பூசல்?

ஒரே கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏவும் மோதிக்கொண்ட நிலையில், எம்எல்ஏ வை கண்டித்து திமுகவினரே போஸ்டர் ஒட்டிய விவகாரம் ஆண்டிப்பட்டி திமுகவினர் இடையே பரபரப்பு

மருத்​துவ முகாமில் திமுக எம்​.பி. மற்​றும் எம்​எல்ஏ ஆகியோர் மேடை​யிலேயே கார​சா​ர​மாக ஒரு​மை​யில் திட்டி வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். ஆட்​சி​யர், பொது​மக்​கள் முன்​னிலை​யில் நடை​பெற்ற இந்த மோதல் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திமுக எம்.பி., எம்.எல்.ஏ மேடையில் மோதல் ! மன்னிப்பு கேட்க போஸ்டர்,திமுக-வில் வெடித்த உட்கட்சி பூசல்?

தேனி மாவட்​டம் ஆண்​டிபட்டி வட்​டத்​தில் உள்ள சக்​கம்​பட்டி இந்து மேல்​நிலைப் பள்​ளி​யில் சுகா​தா​ரத் துறை சார்​பில் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்ட மருத்​துவ முகாம் நடை​பெற்​றது. மாவட்ட ஆட்​சி​யர் ரஞ்​ஜீத்​சிங் தலை​மை​யில் நடந்த இம்​மு​காமில், திமுக தேனி எம்​.பி. தங்க தமிழ்ச்​செல்​வன், ஆண்​டிபட்​டி, பெரியகுளம் திமுக எம்​எல்​ஏக்​கள் மகா​ராஜன், சரவணக்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். முகாமின் வரவேற்பு பேனரில் தனது படம் இல்​லாததைக் கண்டு கோபத்​துடன் மேடைக்கு வந்த தேனி எம்​.பி. தங்​க ​தமிழ்ச்​செல்​வன், தனது படம் இடம் பெறாதது ஏன் என்று ஆண்டிபட்டி எம்​எல்ஏ மகாராஜனிடம் கேட்​டு, கோப​மாக திட்​டி​னார்.

திமுக எம்.பி., எம்.எல்.ஏ மேடையில் மோதல் ! மன்னிப்பு கேட்க போஸ்டர்,திமுக-வில் வெடித்த உட்கட்சி பூசல்?

நான்தான் கொடுப்பேன்... பின்​னர் நிகழ்ச்சி தொடங்​கியது. முதல்​கட்​ட​மாக கர்ப்​பிணி​களுக்கு பாது​காப்பு பெட்​டகம் வழங்​கப்​பட்​டது. தொடர்ந்​து, கட்​டு​மான நல வாரி​யம் சார்​பில் விபத்து நிவாரணத் தொகைக்​கான ஆணை வழங்​கப்​பட்​டது. எம்​.பி. தங்க தமிழ்ச்​செல்​வன் பாதிக்​கப்​பட்​டோர் குடும்​பத்​தினருக்கு நிவாரணத் தொகைக்​கான ஆணையை வழங்க முற்​பட்​ட​போது, அதை ஆண்​டிபட்டி எம்​எல்ஏ மகா​ராஜன் பறித்​து, ‘இது நான் வாங்​கிக் கொடுத்​தது, நான்​தான் கொடுப்​பேன்’ என்று கூறி, பயனாளி​யிடம் கொடுத்​தார்.

திமுக எம்.பி., எம்.எல்.ஏ மேடையில் மோதல் ! மன்னிப்பு கேட்க போஸ்டர்,திமுக-வில் வெடித்த உட்கட்சி பூசல்?

இதனால் அதிர்ச்​சி​யடைந்த தங்க தமிழ்ச்​செல்​வன், எம்​எல்ஏ மகா​ராஜனை ஒரு​மை​யில் திட்​டத் தொடங்​கி​னார். இதைக் கேட்ட எம்​எல்ஏ மகா​ராஜனும், கோபத்​தில் கார​சா​ர​மாக பேசி​னார். மைக்கில் இந்த வாக்​கு​வாதம் பலருக்​கும் கேட்​ட​தால், அனை​வரும் அதிர்ச்சி அடைந்​தனர். மாவட்ட ஆட்​சி​யர் மற்றும் பொது​மக்​கள் முன்​னிலை​யில், மேடை​யிலேயே இரு​வரும் உரத்த குரலில் சண்​டை​யிட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் இரு​வரை​யும் சமா​தானப்​படுத்த முயன்​றனர். அப்​போது, செய்​தி-மக்​கள் தொடர்பு அலு​வலர் நல்​லதம்பி மைக்கை வாங்​கி, அவசர அவசர​மாக நன்றி கூறி, நிகழ்ச்​சியை முடித்​து ​வைத்​தார். பின்​னர் எம்​.பி. எம்​எல்​ஏ.ஆகியோர் அடுத்​தடுத்து அங்கிருந்து வெளி​யேறினர். மேடை​யிலேயே திமுக எம்​.பி. எம்​எல்ஏ ஆகியோர் பொது​மக்​கள் முன்​னிலை​யில் கார​சா​ர​மாக சண்​டை​யிட்​டது, திமுக​வினரின் கோஷ்டிப் பூசலை வெளிக் கொண்டு வந்​துள்​ளது என்று பலரும் விமர்​சித்​தனர்​.

திமுக எம்.பி., எம்.எல்.ஏ மேடையில் மோதல் ! மன்னிப்பு கேட்க போஸ்டர்,திமுக-வில் வெடித்த உட்கட்சி பூசல்?

இந்த நிலையில் தேனி எம்பியும், ஆண்டிபட்டி எம்எல்ஏவும் ஒருவரை ஒருவர் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆண்டிப்பட்டி நகரில் தங்கத்தமிழ்செல்வனுக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். ஆண்டிப்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் என குறிப்பிடப்பட்ட அந்த போஸ்டரில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபடும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனை ஒருமையில் பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கட்சியினரை மதிக்காத அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஒரே கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏவும் மோதிக்கொண்ட நிலையில், எம்எல்ஏ வை கண்டித்து திமுகவினரே போஸ்டர் ஒட்டிய விவகாரம் ஆண்டிப்பட்டி திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே இந்த போஸ்டர் ஒட்டியது யார்? திமுகவை சேர்ந்தவர்கள் தான் ஒட்டியதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget