தெரு நாய்களை கட்டுப்படுத்த லஞ்சமா..? - ஊராட்சித்தலைவரை கண்டித்து தாலுகா அலுவலகத்தில் விவசாயி தர்ணா
தெருநாய்களை கட்டுப்படுத்த கோரினால், ஊராட்சித்தலைவர் நாய் ஒன்றுக்கு 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறி இறந்த ஆட்டுக்குட்டியுடன் விவசாயி தாலுகா அலுவலகத்தில் தர்ணா.
பழனியருகே தெருநாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்தன. தெருநாய்களை கட்டுப்படுத்த கோரினால், ஊராட்சித்தலைவர் நாய் ஒன்றுக்கு 500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறி இறந்த ஆட்டுக்குட்டியுடன் விவசாயி தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Ajithkumar: தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ளது கோதைமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பண கவுண்டன்வலசு கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். விவசாயியான இவருக்கு சொந்தமாக 10 ஆடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் ராஜேந்திரன் வளர்த்துவந்த ஆடுகளை கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தது. மேலும் ஒரு ஆடு உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளது. இதையடுத்து உங்களை ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் இடம் சென்று தனது ஆடுகளை தெருநாய்கள் கடித்து விட்டதாகவும் தொடர்ந்து தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்றால், நாய் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் பணம் கொடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார், விவசாயி ராஜேந்திரனிடம் லஞ்சம் கேட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த விவசாயி ராஜேந்திரன் உயிரிழந்த ஆட்டுக்குட்டி ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு பழனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அலுவலக வாசலில் ஆட்டுக்குட்டியுடன் அமரந்து தர்ணாவில் ஈடுபட்டார். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் ராஜேந்திரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தான் ஆட்டுக்குட்டிகளை வைத்து தான் குடும்பத்தை நடத்தி வருவதாகவும், ஒரே இரவில் நான்கு ஆடுகள் உயிரிழந்த நிலையில்,
Breaking News LIVE: மார்ச் 22-ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி..
இரக்கமின்றி தன்னிடம் கோதைமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் லஞ்சம் கேட்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், விவசாயி ராஜேந்திரனுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயி ராஜேந்திரன் போராட்டத்தை கைவிட்டு திரும்ப சென்றார். நாய்கள் கடித்ததில் ஆடுகளை இழந்த விவசாயியிடம் ஊராட்சிமன்றத் தலைவர் லஞ்சம் கேட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.