மொத்தமாய் மாறப்போகுது திண்டுக்கல்.. ஆத்தூருக்கு அடித்தது லக்.. விரைவில் வரும் டைடல் பார்க்
Dindigul TIDEL Park: ரூ.50 கோடியில் டைடல் பார்க், ரூ.150 கோடியில் அமையவுள்ள தொழிலாளர் மருத்துவமனைக்கான இடங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருவாய் துறை அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களுக்கு ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் டைட்டல் பார்க் அமையவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. ரூ.50 கோடி திட்டமதிப்பில் டைடல் பார்க், ரூ.150 கோடியில் தொழிலாளர் மருத்துவமனை அமையவுள்ள நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு நடத்தியுள்ளார். விரைவில் டைடல் பார்க் அமைவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் தீவிரமடைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. பழனியில் விவசாயமே பிரதானமாக தொழிலாகும். பழனியில் பழனி கோவில், கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்கள் இருப்பதால் அது மட்டுமே அதிக வருவாய் தரக்கூடிய தாலுகாக்களாக உள்ளது. ஆத்தூர், நத்தம் திண்டுக்கல்லை பகுதிகளை பொறுத்தவரையில் பெரிய அளவில் தொழில் நிறுவனங்கள் ஏதும் இல்லாததால் அங்கும் விவசாயம்தான் பிரதானமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆத்தூரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வருகிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி. இதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் ஆத்தூருக்கு மகிழ்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்கு ரூ.50 கோடியில் டைடல் பார்க் மற்றும் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிலாளர் மருத்துவமனை அமைய இருக்கிறது. ஆத்தூர் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் டைட்டல் பார்க் அமைகிறது. ரூ.50 கோடியில் டைடல் பார்க், ரூ.150 கோடியில் அமையவுள்ள தொழிலாளர் மருத்துவமனைக்கான இடங்களை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருவாய் துறை அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களுக்கு ஆய்வு செய்தார்.
சீவல்சரகு ஊராட்சிக்கு உட்பட்ட சுதனாகியபுரத்தில் ரூ.50 கோடி மதிப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் டைடல் பார்க் (மென்பொருள் பூங்கா) அமையவுள்ளது. கடந்த மார்ச் 11ஆம் தேதியன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி மற்றும் ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன் ஆகியோருடன் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர் அதனருகே ரூ.150 கோடி மதிப்பில் அமையவுள்ள தொழிலாளர் மருத்துவமனை அமைய உள்ள இடத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பல மாணவர்கள் பெங்களூரு, சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் ஐடி துறையில் பணிபுரிந்து வருகின்றனர். ஆத்தூர் தொகுதியை சேர்ந்த பொறியியல் படித்த மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் சீவல்சரகு ஊராட்சி சுதனாகியபுரத்தில் 8 மாடி கட்டிடத்துடன் டைடல் பார்க் அமைகிறது. இது போல இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர் நலன்கருதி தொழிலாளர் நல மருத்துவமனை (இஎஸ்ஐ) அமையவுள்ளது என்று தெரிவித்தார்.
ஏற்கனவே மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் டைடல் பார்க் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்த கட்டமாக வளர்ச்சியில் பின்தங்கிய திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரிலும் டைடல் பார்க் அமைய இருக்கிறது. மேலும் தொழிலாளர் மருத்துவமனையும் அமைய இருப்பதால் அங்கு ரியல் எஸ்டேட் தொழில் தீவிரமடைந்து வருகிறது. தரிசு நிலங்கள் உள்ளிட்டவற்றை வீட்டு மனைகளாக பிரித்து அனுமதி பெற்று விற்பனை செய்ய தொடங்கி இருக்கின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் ஆத்தூர் பகுதியில் நிலங்களை வாங்கி குவித்து வருகின்றனர்.





















