Dindigul Power Shutdown: : திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை எந்தெந்த பகுதிகளுக்கு மின்சாரம் நிறுத்தம் ?
Dindigul District Power Shutdown January 20th: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை முதல் மாலை வரையில் ஒரு நாள் மின்சார நிறுத்தம்.
திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் நகர் பகுதிகள், என்.எஸ்.நகர், ரோஜாநகர், இ.பி.காலனி, அங்குநகர், செட்டிநாயக்கன்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, நந்தவனப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. என திண்டுக்கல் அங்குநகர் மின்வாரிய அலுவலகம் அறிவித்துள்ளது.
கோவை குற்றாலத்தில் போலி நுழைவுசீட்டு மோசடி - வனவர் சஸ்பெண்ட் ; ரூ. 35 இலட்சம் பறிமுதல்
PM Modi: 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
இதேபோல் இடைக்கோட்டை அருகே உள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், குத்திலிப்பை, சாமியாடிபுதூர், ஐ.வாடிப்பட்டி, நரசிங்கபுரம், கொங்கபட்டி, ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர், புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோளியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, பெருமாள்கவுண்டன்வலசு, கக்கரநாயக்கனூர், வலையபட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று ஒட்டன்சத்திரம் கிராமிய மின் வாரிய அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்