ஒட்டன்சத்திரத்தில் அதிர்ச்சி: பேத்திகளை கொன்று தாய், மகள் தற்கொலை - காரணம் என்ன?
ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் உள்ளிட்ட 4 பேர் தற்கொலை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28 ) என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டி தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராக்கு தொடர்பு ஏற்பட்டதால் அந்த நபருடன் 17. 6.2025 அன்று மாலை 6 மணி அளவில் பவித்ரா வீட்டை விட்டு சென்று விட்டார்.
இதனால் அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாள், மகள் காளீஸ்வரி இரண்டு பேரும் பேத்திகளான லித்திக்ஸா (7), தீப்தி (5) குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்டவர்களின் உடல்களை கூராய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)






















