திண்டுக்கல் & அம்மையநாயக்கனூர்: நாளை மின் தடை! உங்கள் பகுதி உள்ளதா? முக்கிய அறிவிப்பு!
நாளைய தினம் 5ம் தேதி திங்கள்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்வினியோகத்தை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. அப்பணிகளின்போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நாளைய தினம் 5ம் தேதி திங்கள்கிழமை அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக பின்வரும் பகுதிகளில் நாளைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை பகுதிகள்
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராமம் துணை மின்நிலைய பகுதிகளான பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியார்பட்டி, வட்டப்பாறை, சரவணாமில், சுதனாகியபுரம், ஆதிலட்சுமிபுரம், சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி ஆகிய பகுதிகள். இதேபோல் அம்மையநாயக்கனூர் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை, முருகத்தூரன்பட்டி, சாண்டலார்புரம், சிப்காட் தொழில் வளாகம், பள்ளப்பட்டி, மாவூர் அணை பொட்டிகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
மின் தடை ஏன்
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்





















