மேலும் அறிய
Advertisement
மதுரை ; ”ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது” - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு !
கோயில் திருவிழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு தொடங்கி 11க்குள் முடிக்க வேண்டும். ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கோயில் திருவிழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு தொடங்கி 11க்குள் முடிக்க வேண்டும். ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தற்போது சித்திரை மாதம் என்பதால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது இந்த திருவிழாக்களில் காலம் காலமாக கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
Madurai |கோயில் திருவிழாக்களில் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள் இரவு 8 மணிக்கு
— Arunchinna (@iamarunchinna) May 9, 2022
தொடங்கி 11க்குள் முடிக்க வேண்டும். ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.#madurai| | @UpdatesMadurai | @SRajaJourno | #court | @jeyahirthi | @kathirreporter pic.twitter.com/ffTWtohwHl
ஆனால் கொரோனா தொற்று காரணமாகவும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடத்துவதால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக கூறி காவல்துறையினர் ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து வருகின்றனர் தற்பொழுது கொரோனா தொற்று குறைந்து தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிவழங்க கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து பல்வேறு மனுக்கள் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரணை செய்த நீதிபதி ரமேஷ் பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக ஆடல் பாடல் நிகழ்ச்சி மாலை 8 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். ஆபாசமான வார்த்தைகளை நடனங்களும் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai ; ’இந்து மதத்தை இழிவாக பேசினால் கேள்வி கேட்பேன்; ஆனால் ஜீயர் சொன்னது தப்பு" - மதுரை ஆதீனம் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion