Pugar Petti: ஓரங்கட்டப்பட்ட ஒற்றை கண் பாலம்; சீரமைக்கப்படாத சாலையால் தேங்கும் கழிவு நீர்: சின்னாபின்னமாகும் மக்கள்!
ஒற்றைக்கண் பாலத்தின் கீழ் தேங்கியிருக்கும் நீரோடை மற்றும் வழித்தடங்களை சீரமைத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஏதுவாக வழிவகை செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
![Pugar Petti: ஓரங்கட்டப்பட்ட ஒற்றை கண் பாலம்; சீரமைக்கப்படாத சாலையால் தேங்கும் கழிவு நீர்: சின்னாபின்னமாகும் மக்கள்! Complaint Box : Single eye bridge that has not been repaired for years. Complaints about sanitary conditions due to accumulation of waste water in hilly areas Pugar Petti: ஓரங்கட்டப்பட்ட ஒற்றை கண் பாலம்; சீரமைக்கப்படாத சாலையால் தேங்கும் கழிவு நீர்: சின்னாபின்னமாகும் மக்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/03/2d39e0a6c6ca52a0a46dacb690a05e7e1667484292800333_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புகார் பெட்டி: திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியையும் ,வேடபட்டியையும் இணைக்கும் ஒரு பகுதியாக ஒற்றை கண் ரயில்வே பாலம் உள்ளது. மதுரையிலிருந்து திண்டுக்கல், பழனி வருவதற்கும் திண்டுக்கல்லில் இருந்து மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் ரயில்வே பாதை இதுவே ஆகும்.
இந்த வேடபட்டியை இணைக்கும் ரயில்வே பாலத்தின் கீழ் ஒற்றைக் கண் பாலத்தில் பல வருடங்களாக பாலம் சீரமைக்கப்படாமல் இருப்பதால் மழை பெய்யும் காலங்களில் கடுமையான சிக்கலில் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். அதோடு அப்பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீரும் ஒற்றைக்கண் பாலத்தின் கீழ் சேர்வதால், இந்த கழிவு நீர் முழங்கால் வரை தேங்கி நிற்பதால் அதை கடந்து செல்வோர்க்கு பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
Rain Alert : 72 ஆண்டுகளில் 3-வது முறை.. சென்னை எந்த இடத்தில் இவ்வளவு மழை? நாளைக்கான அப்டேட் என்ன?
ஒற்றை கண் பாலத்தின் கீழ் பகுதியில் அனைத்து கழிவுநீரும் சேரும் வகையில் கால்வாய் அமைந்துள்ளதாகவும், பல இடங்களில் கால்வாய் அடைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழி இன்றி தேங்கும் சூழல் ஏற்படுகிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக மழை பெய்யும் காலங்களில் இப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு வழிகளில் செல்லும் நீரானது இந்த ஒற்றைக்கண் பாலத்தை வந்து சென்றடைவதாகவும் இதனால் மழை பெய்யும் நாட்களில் கடுமையான போக்குவரத்துக்கு சிக்கலாக உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
Aruna Sairam: கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராமுக்கு செவாலியர் விருது..
குறிப்பாக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் முக்கிய பிரதான சாலை வழியாக இருப்பதாலும் வேடபட்டிக்கு செல்லும் ஒரு முக்கிய பாதை என்பதாலும் இந்த சாலையை பயன்படுத்துவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இந்த ஒற்றைக்கண் பாலத்தின் கீழ் தேங்கியிருக்கும் நீரோடை மற்றும் வழித்தடங்களை சீரமைத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இவர்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்ப்பார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)