தேனியில் ஆபத்தான நிலையில் 95 பள்ளி கட்டடங்கள் - உடனடியாக இடிக்க ஆட்சியர் உத்தரவு
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் , அரசு பள்ளிகள் என 95 பள்ளிகளில் உள்ள பழைய கட்டிடங்களை இடிக்க ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையில் உள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பழைய பள்ளிக்கட்டிடங்கள், சேதம் அடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழகஅரசு சார்பில் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் கட்டிடங்களின் நிலைமை குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் மொத்தம் 942 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் உள்ள பழைய கட்டிடங்கள், சேதம் அடைந்த கட்டிடங்கள், இடித்து அகற்ற வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் 64 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 31 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 95 பள்ளிகளில் பழமையான மற்றும் சேதம் அடைந்த கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
'இலங்கையை வென்ற ராஜராஜ சோழன்' - ஆதாரத்தை கண்டு பிடித்த அரசுப்பள்ளி மாணவி
இந்த கட்டிடங்களை இடிக்கவும், அங்கு மாணவர்கள் செல்லாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சி தலைவர் முரளிதரன் உத்தரவின்பேரில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில், ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
ஜனவரி மாதம் இந்திய சிறைக்கு மாற்றப்படும் தமிழர்கள் - உயர்நீதிமன்ற கிளையில் மத்திய அரசு பதில்
மேலும் கம்பம் அருகே கீழக்கூடலூர் பகுதியில் உள்ள மேல் நிலைப்பள்ளி ஒன்றின் பள்ளி கட்டிட சுவரை இடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பராமரிப்பு தேவைப்படும் கட்டிடங்களில் தேவையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். பழமையான வகுப்பறை கட்டிடங்கள், பயன்பாடு இன்றி உள்ள பழமையான கழிப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றை இடித்து அகற்ற உத்தரவிட்டுள்ளார் ஆட்சியர் முரளிதரன்.