மேலும் அறிய

நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில் 

நவராத்திரி விடுமுறை கால சிறப்பு ரயில் தூத்துக்குடிக்கு மற்றும் சென்னை - நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்.

தூத்துக்குடிக்கு நவராத்திரி விடுமுறை கால சிறப்பு ரயில் மற்றும் சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில்  இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடிக்கு நவராத்திரி விடுமுறை கால சிறப்பு ரயில்

நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - தூத்துக்குடி இடையே  சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி  டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்  - தூத்துக்குடி சிறப்பு ரயில் (06186) அக்டோபர் 8 அன்று  சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.50 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06187)  தூத்துக்குடியில் இருந்து அக்டோபர் 10 அன்று மாலை 04.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி  ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3  இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும். ‌ இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

- மதுரை மாநகரில் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் - எப்போது? எங்கே? - முழு விவரம் இதோ

நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - நாகர்கோவில் சிறப்பு ரயில் 

நவராத்திரி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே ஒரு குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06178) சென்னையிலிருந்து அக்டோபர் 9 அன்று இரவு  07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06179) நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 10 அன்று இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர்,  திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 15 குறைந்த  கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு சரக்குப்பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மாமல்லபுரம் To மைசூர்.. பிரம்மாண்ட சிவன் சிலை.. தமிழர் பெருமையை உணர்த்திய மாமல்லபுரம்..

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Savitri Jindal: ஹரியானா தேர்தல், நாட்டின் பணக்கார பெண்ணை கட்சியிலிருந்து நீக்கிய பாஜக..! சாவித்ரி ஜிண்டால் செய்தது என்ன?

தலைப்பு செய்திகள்

மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
உசிலம்பட்டி: கூம்பு ஒலிப்பெருக்கி இசைப்போட்ட.. பாரம்பரிய வாழ்வாதாரம் காக்க முயற்சி !
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!
பள்ளி மாணவர்களின் தொல்லியல் தேடல்: அரிய காசுகள் பல்கலைக்கழகத்திற்கு நன்கொடை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Sunscreen For Oily Skin: ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ஆய்லி ஸ்கின்னா? எண்ணெய் வடிகிறதா? 5 பொருட்களை கொண்ட டக்கரான சன்ஸ்க்ரீன் - செய்வது எப்படி?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
Embed widget