மேலும் அறிய
Advertisement
இந்தி, சமஸ்கிருதத்தை பாஜக திணிக்க பார்க்கிறது - வைகோ
இந்துத்துவா தத்துவத்தினுடைய அடிப்படையில் தான் அவர்கள் ஒருமைப்பாட்டை கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கேட்ட கேள்விக்கு.
நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை வந்ததில்லை என்று சொல்லக்கூடிய வகையில் இந்துத்துவா தத்துவத்தையும் சனாதன தர்மத்தை வைத்து ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் ஒரே கலாச்சாரம் என்று நடைமுறைக்கு உதவாவதும், ஒருபோதும் நடக்க கூடாததுமான ஒரு விஷத்தை பி.ஜே.பி., கூட்டம் கக்கி கொண்டிருக்கின்றது.
அதற்கு சரியான பதிலை தமிழ்நாடு கொடுக்கும் தமிழகத்தை அதற்கு இடமில்லை என்பதை வரலாறு நிரூபிக்கத்தான் போகிறது. பா.ஜ.க.,வை தமிழகம் ஏற்றுக் கொள்ளாது சனாதன தர்மத்தையும், இந்துத்துவாவையும் ஏற்றுக்கொள்ளாது. இந்துத்துவா தத்துவத்தினுடைய அடிப்படையில் தான் அவர்கள் ஒருமைப்பாட்டை கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். சனாதன தர்மம் இந்துத்துவா மற்றும் இந்தி பிறகு சமஸ்கிருதம் இதுதான் அவருடைய திட்டம் அவருடைய நோக்கம் அது நடக்காது நாளைய கூட்டத்திலே அது பற்றி விரிவாக நான் சொல்லுகிறேன் என கூறினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதியில் வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள் தொடக்கம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
வணிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion