மேலும் அறிய

கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத்

இந்து அறநிலைத்துறையிடம் உள்ள கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும் என கம்பத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி.

தேனி மாவட்டம் கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணி நடந்து கொண்டிருப்பதால், அதை இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் பார்வையிட்டு செயல் அலுவலரிடம் கோவில் சம்பந்தமான பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியின் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.


கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத்

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் பேசுகையில், “கம்பம் கம்பராய பெருமாள், காசி விசுவநாதர் ஆலயம் மற்றும் இந்துக் கோயில்களில் உள்ள சொத்துக்கள் தனியாரின் ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளதாகவும், கோயிலில் வரும் வருவாயை கோயிலுக்கான திருப்பணிகள் செய்யாமல் அதை விடுத்து இங்கே கோயில் வருவாய் முழுக்க அறநிலையத்துறையுடைய கணக்கிலே சென்று விடுகிறது. செய்யக்கூடிய திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்கள் மூலமாகத்தான் திருப்பணியில் செய்யப்படுகிறது. உபயதாரர்கள் அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயிலில் பணிகள் செய்ய வேண்டும் என்றால் அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும். 


கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத்
அதே நேரத்தில் சர்ச்சுகள் மசூதிகளில் பழமை வாய்ந்தவைகளை புதுப்பிப்பதற்கு அரசாங்கம் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்குகிறது. இந்த நிலைமை மாற வேண்டும். இந்தக் கோயில்களில் திருப்பணியானது அரசு நிதியிலிருந்து செய்யப்பட வேண்டும். கோயில் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும். இது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை இந்து அறநிலையத்துறை அமைச்சரிடத்திலும் முதல்வர் இடத்திலும் கவனத்திற்கு எடுத்துச் செல்வேன்” என்று கூறினார். மேலும், ”இப்பகுதியில் உள்ள பிரசிதிபெற்ற கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழா வருடத்திற்கு ஒரு முறை மட்டும் தான் மக்களை அனுமதிக்கின்றனர். அந்த நிலைமை மாறி மாதந்தோறும் பௌர்ணமி நாளில் கண்ணகி கோவிலில் வழிபாடு செய்திட  வகையிலே அந்த கோவிலுக்கு நம்முடைய வழிபாட்டுரிமை மீட்டுக் கொடுக்க வேண்டும். இது தமிழக அரசாங்கத்தினுடைய கடமை .


கோயில்கள் அனைத்தையும் அறங்காவலர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஒப்படைக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத்

நாடாளுமன்றத்திலே முதல் முதலாக எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பெடுத்துக் கொண்ட பிறகு ராகுல் அவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் இந்துக்கள் என்பவர்கள் பிஜேபியை சார்ந்தவர்கள், இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள், ஆர்எஸ்எஸ்ஐ சார்ந்தவர்கள், இந்துக்கள் அல்ல என்று ராகுல் பேசியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் மற்றும் இந்திய கூட்டணியில் இருந்து கொண்டு எழுதிக் கொடுத்ததை ராகுல் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்துக்கள் சமூக வலைதளங்களில் எந்த பதிவு போட்டாலும் திராவிட மாடல் அரசு பொய் வழக்கு போட்டு இந்துக்களை சிறையில் அடைகின்றனர். இதை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்து அறநிலை துறையில் உள்ள அதிகாரிகள் அனைவரும் ஊழல் செய்து வருகின்றனர். இதனால் அவர்களை மாற்றி இந்துக் கோயில்கள் அனைத்தையும் அறங்காவலரிடம் ஒப்படைத்து அவர்கள் நிர்வாகிக்கும்படி அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget