மேலும் அறிய

தாடிக்கொம்பு பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: கூகுள் பே மூலம் லஞ்சம்; ரூ.1.5 லட்சம் பறிமுதல்!

கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் லஞ்சமாகப் பெறப்பட்ட பணம் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை – ரூ.52,900 ரொக்கம், கூகுள் பே மூலம் பெறப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்!


தாடிக்கொம்பு பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: கூகுள் பே மூலம் லஞ்சம்; ரூ.1.5 லட்சம் பறிமுதல்!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட தாடிக்கொம்பு முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரொக்கப் பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் லஞ்சமாகப் பெறப்பட்ட பணம் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

​திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன் தலைமை மற்றும் 8 போலீசார் அடங்கிய குழுவினர், தாடிக்கொம்பு முதல் நிலை பேரூராட்சி அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டு, வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாதவாறு இந்த சோதனை தீவிரமாக நடைபெற்றது.

​இரவு 7:35 மணி நிலவரப்படி, பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ. 52,900 ரொக்கப் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், அங்கு பணிபுரியும் தற்காலிக ஊழியர் ஒருவரின் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, கூகுள் பே (Google Pay) செயலி மூலமாக ரூ.1 லட்சம் பெறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதுவும் பறிமுதல் செய்யப்பட்டது.

தாடிக்கொம்பு பேரூராட்சியில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: கூகுள் பே மூலம் லஞ்சம்; ரூ.1.5 லட்சம் பறிமுதல்!

​டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ரூ.1 லட்சம் பெற்ற தற்காலிக பணியாளர் உட்பட, மேலும் இரண்டு தற்காலிக பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

​இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன் தகவல் தெரிவிக்கையில், "தற்போது வரை கைது நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. கைப்பற்றப்பட்ட பணத்திற்கான கணக்குகள் மற்றும் ஆவணங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த விசாரணை மற்றும் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னரே, அடுத்தகட்ட மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார். ​பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

பயிர்க்கடன் ரத்து, காவிரி நீர்: TVK அரசுக்கு எதிராக மதுரையில் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பயிர்க்கடன் ரத்து, காவிரி நீர்: TVK அரசுக்கு எதிராக மதுரையில் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
மதுரை அரசு பேருந்தில் 'கொடூரமா' வாசகம்: LED போர்டு குளறுபடி தொடர்கிறது!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் - ஆணையர் உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget