தேனியில் 80 சதவீத பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி - 15 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு
பொது வேலை நிறுத்தம் எதிரொலி தேனி மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் பேருந்துகள் இயங்காததால் பொதுமக்களும் பேருந்து பயணிகளும் அவதி.
![தேனியில் 80 சதவீத பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி - 15 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு About 80 per cent of the buses in the district are out of order, affecting commuters and affecting about Rs 15 crore in cash flow in banks தேனியில் 80 சதவீத பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதி - 15 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/29/7457f1abc00f5b17c00f5abe1393736c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் எதிரொலியாக தமிழகத்தில் பேருந்துகள் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் அரசு பேருந்து போக்குவரத்து கழக பணியாளர்கள் பெரும் அளவில் போராட்டத்தில் பங்கேற்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 2,800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 1,500 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து 360 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், நேற்றும், இன்றும் 75 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. சுமார் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கியது. இதனால், 80 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
முடிந்தால் தொட்டுப்பார்க்கட்டும்: திமுக அரசுக்கு 6 மணி வரை கெடு விதித்த அண்ணாமலை
Amazon: 18 தளம் கொண்ட அமேசான் நிறுவனத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
குறிப்பாக அதிகாலை மற்றும் காலை நேரத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் பரிதவித்தனர். அதே நேரத்தில் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால், பேருந்து நிலையங்களில் அரசு பேருந்துகளை விடவும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை கிளை 1-ல் உள்ள 40 பேருந்துகளில் 2 பேருந்துகளும், கிளை 2-ல் உள்ள 68 பேருந்துகளில் 12 பேருந்துகளும் மட்டுமே இயக்கப்பட்டன. 96பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தேனி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் சுமார் 1,200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 700 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வங்கிகளில் காசோலை, வரைவோலை பரிவர்த்தனை, நகைக்கடன், விவசாய பயிர்க்கடன், தொழிற்கடன் வழங்குதல் உள்ளிட்டபணிகள் பாதிக்கப்பட்டன. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.15 கோடி அளவில் பணபரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
தமிழ் புத்தாண்டு விடுமுறையொட்டி தாம்பரம் - நாகர்கோயில் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)