Sivakasi : குடிநீர் மேல்நிலை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட நாய் சடலம்; மக்கள் அதிர்ச்சி! விசாரணை தீவிரம்!
சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் நாய் சடலம் கிடந்து எடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Sivakasi : குடிநீர் மேல்நிலை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட நாய் சடலம்; மக்கள் அதிர்ச்சி! விசாரணை தீவிரம்! A dead dog found in the water tank at Pudukkottai in sivakasi taluka Viruthunagar Sivakasi : குடிநீர் மேல்நிலை தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட நாய் சடலம்; மக்கள் அதிர்ச்சி! விசாரணை தீவிரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/06/c7203e2a6273e3f134e26eea317c53ff1675688504270333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் நாய் சடலம் கிடந்து எடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராம குடிநீர் மேல்நிலை தொட்டியில் நாய் சடலம் கிடந்து எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் சுத்தம் செய்யும் பணிக்காக, இரண்டு நாட்களாக நீர் நிரப்பப்படாமல் இருந்த நிலையில், அதில் இறந்த நாயை அடையாளம் தெரியாத நபர்கள் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாயை கொன்று குடிநீர் தொட்டிக்குள் வீசிச் சென்றவர்கள் குறித்து சிவகாசி எஸ்.பி. தனஞ்ஜெயன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். குடிநீர் தொட்டி அருகே காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)