30 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு.. தெரிவித்த உயர்நீதிமன்றம்..
பத்திரப்பதிவு சட்டம் 22A அமல்படுத்தியதில் இருந்து தற்போது வரை 30 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பு தகவல்
பத்திரப்பதிவு சட்டம் 22A அமல்படுத்தியதில் இருந்து தற்போது வரை 30 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது- உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசுதரப்பு தகவல் அளித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையை 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தேனி வீரபாண்டி பகுதியில் முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்து வருகின்றனர். உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பீட்டையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள உஷாராணி (சார் பதிவாளர்) என்பவர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார்.எனவே, முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் முறைகேடாக பத்திர பதிவு செய்த சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும் அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு சட்டம் 22A அமல்படுத்திய பின்பு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதன் விவரங்களை புள்ளி விவரத்துடன் பத்திர பதிவுத்துறை தலைவர் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்ததுஅரசு தரப்பில் பத்திர பதிவு சட்டம் 22A அமல்படுத்தியதில் இருந்து தற்போது வரை 30,ஆயிரம் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் வழக்கு குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு ஒரு வார காலம் கால அவகாசம் கோரப்பட்டது
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை 17 தேதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்
தனது மகன் கொலை குறித்து மறுவிசாரணை செய்யவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிடக் கோரிய வழக்கு.
வழக்கை தக்கலை இன்ஸ்பெக்டர் மறுவிசாரணை நடத்தி, 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம் தட்டான்விளையைச் சேர்ந்த தங்கப்பன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் இளைய மகன் மணிகண்டன். கடந்த 28.1.2013ல், பூலாங்கோட்டில் உள்ள ரயிலில் அடிப்பட்டு ஆளில்லா ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. ஒரு கை துண்டிக்கப்பட்டிருந்தது. தலையின் முன்பகுதி மற்றும் விலா பகுதியில் வெட்டு காயம் இருந்தது. கால் தொடையிலும் ெவட்டுக்காயம் இருந்தது. என் மகன் ஒரு பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணின் பெற்றோர் தான் என் மகனை கொலை செய்துள்ளனர். கோயிலில் இருந்த என் மகனை தாக்கி கொலை செய்துள்ளனர். இதை மறைத்து ரயில்வே தண்டவாளத்தில் உடலை போட்டுச் சென்றுள்ளனர். போலீசார் துணையுடன் தற்கொலை என வழக்கை முடித்துள்ளனர். எனவே என் மகன் கொலை குறித்து மறுவிசாரணை செய்யவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, சம்பந்தப்பட்ட வழக்கை தக்கலை இன்ஸ்பெக்டர் மறுவிசாரணை நடத்தி, 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.