மேலும் அறிய

தேனி: வராக நதியில் வெள்ளப்பெருக்கு - ஒருவர் உயிரிழப்பு மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

’’வராக நதி வெள்ளத்தில் இரண்டு மாணவர்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது’’

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தில் வித்யபாரதி வேதபாடசாலை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வராக நதியில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது.


தேனி: வராக நதியில் வெள்ளப்பெருக்கு - ஒருவர் உயிரிழப்பு மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

இங்கு தங்கி படிக்கும் 5 மாணவர்கள் நேற்று வராக நதி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றுள்ளனர். அவர்களில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த மணிகண்டன் (20) என்ற மாணவர் திடீரென ஆற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்து மற்ற மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது மதுரையை சேர்ந்த சுந்தரநாராயணன் (18) என்ற மாணவரும் திடீரென ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து மணிகண்டனும், சுந்தரநாராயணனும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். 


தேனி: வராக நதியில் வெள்ளப்பெருக்கு - ஒருவர் உயிரிழப்பு மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

இதுகுறித்து ஜெயமங்கலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுந்தரநாராயணன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் தேடும் பணியில் 4 மணி நேரம் வராக நதி ஆற்றுப்பகுதியில் தேடியும் மாணவர்களின் உடல் கிடைக்காத நிலையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் வராகநதி ஆற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்த நிலையில் இரவு நேரமும் ஆனதால் மாணவர்களின் உடலை தேடும் பணியினை கைவிட்டனர்.


தேனி: வராக நதியில் வெள்ளப்பெருக்கு - ஒருவர் உயிரிழப்பு மற்றொருவரை தேடும் பணி தீவிரம்

இந்நிலையில் பெரியகுளம் தீயணைப்புத்துறையினர் இன்று 2 ஆவது நாளாக வராகநதி ஆற்றில்  காலை 7 மணி முதல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களை  தேடும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் மேல்மங்கலம் அருகே முத்தையா கோவில் பகுதியில் உள்ள வராக நதி ஆற்றுப் பகுதியில் நேற்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மதுரையைச் சேர்ந்த சங்கரநாராயணன் வேத பாடசாலை மாணவன் பயிலும் மாணவன்  ஆற்றுநீர் அடித்துச் செல்லப்பட்டு கரையோரம் உள்ள செடிகளுக்கு இடையே சிக்கி பலியான நிலையில் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மற்றொரு மாணவரை தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தீவரமாக தேடி வருகின்றனர்.

தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

பேபி அணையை பலப்படுத்திய பின் விரைவில் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget