தலைவலி கொடுக்கும் டாஸ்மாக்... குடிமகன்கள் செய்யும் அட்டூழியத்தால் பெண்கள் அச்சம்
Kanchipuram News: இரவு நேரத்தில் குடிமகன்கள் குடித்துவிட்டு அங்கேயே தங்கி வாசலில் இருக்கும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்துவதாக குற்றச்சாட்டு.
காஞ்சிபுரம் குடியிருப்பு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
தலைவலி கொடுக்கும் டாஸ்மாக் கடை
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 வது வார்டு பகுதியிலுள்ள ஜெம்நகரில் செயல்படும் அரசு மதுபான கடையினை இடமாற்றம் செய்யக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்த நிலையில் மீண்டும் அப்பகுதி பெண்கள் மாமன்ற உறுப்பினர் சிந்தன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் அரசு மதுபான கடையினை இடமாற்றம் செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையினால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு என்பதே இல்லாமல் இருப்பதாலும், இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாத சூழலில் தாங்கள் உள்ளதாகவும், மது அருந்தும் மது பிரியர்கள் தங்களது வீட்டின் அருகேயே அருவருக்கத்தக்க வகையில் சிறுநீர் கழிப்பதும், அதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் நிலவுவதாகும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஆங்காங்கே வீசி செல்வதால் அவற்றினால் பல்வேறு வகையில் பாதிப்படைவதால் உடனடியாக தங்களது பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையினை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
சரமாரி புகார்கள்
மேலும் கனவில் சில தினங்களாக முடிந்து விட்டு மர்ம நபர்கள் வீட்டில் வாசலில் வைக்கப்படும் வாகனங்களை மீது தாக்குதல் ஏற்பட்டு வாகனங்களை சேதம் அடைந்து வருவதாகவும், போலீசாருக்கு தகவல் அளித்து நடவடிக்கை எடுத்தாலும் இந்த சூழ்நிலை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி பெண்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் கூறுகையில், இந்த கடை குறித்து புகார் அளித்தால் அனுமதி உடன் கடை நடைபெறுவதாக தெரிவிக்கின்றனர். அனுமதி உடன் கடை நடைபெறுகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வெளியே யார் வந்து படுத்து கிடக்கிறார்கள் என பார்ப்பதே எங்களுக்கு வேலையாக இருக்கிறது. கஷ்டப்பட்டு இந்த இடத்தில் வீடு கட்டினோம், ஆனால் வீட்டிற்கு வாடகைக்கு யாரும் வருவதில்லை. குழந்தைகள் மிகவும் அச்சப்படுகிறார்கள் என தெரிவித்தார் .
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சிந்தன் கூறுகையில், இந்த பகுதியில் கவுன்சிலராக இருக்கிறேன் ஆனால் தண்ணீர் வரவில்லை, கழிவுநீர் பிரச்சனை என புகார்கள் வருவதில்லை. அதற்கு மாறாக 12 மணி ஆகிவிட்டால் குடிப்பவர்கள் தங்கள் வீட்டு அருகே பிரச்சனை செய்கிறார்கள் குடித்துவிட்டு வீட்டருகே படுத்து கிடக்கிறார்கள் என போன் வர தொடங்கிவிடுகிறது. ஒவ்வொரு நாளும் இந்த பிரச்சினையை இந்த மக்கள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பலத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.
Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை, நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.
நீங்கள் ABP NADU-ன் 9566546083 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.