காஞ்சிபுரத்தில் நாளை மின் தடை! எந்தெந்த பகுதிகளில்? தெரிந்து கொள்ளுங்கள்!
Kanchipuram Power Shutdown: காஞ்சிபுரத்தில் நாளை முக்கிய பகுதிகளில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவு, ஆரியபெரும்பாக்கம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை - Kanchipuram Power Shutdown
சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் வருகின்ற 14.10.2025 செவ்வாய்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் / வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை மேற்கொள்ளப்படும் பகுதிகள் என்னென்ன ?
சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில் 230 கி.வோ. ஆரியபெரும்பாக்கம் துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக வரும் 14.10.2025 செவ்வாய்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் கீழம்பி, பள்ளம்பி, ஆட்டோநகர், ஆரியபெரும்பாக்கம், கூரம், செம்பரம்பாக்கம், புதுப்பாக்கம், பெரியகரும்பூர், சித்தேரிமேடு, துலக்கம் தண்டலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை ஒருநாள் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம் என்ன ?
மேலே தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளை ஒருநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
பருவமழை மற்றும் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை வேலைநாள் என்பதால் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதால், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தை சார்ந்தவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். மின்தடை மேற்கொள்ளவும் உள்ளதால், மின் தேவைக்கான பணிகளை அதற்கு 9 மணிக்கு முன்பாக செய்து கொள்ளும்படியும் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர்.





















