காஞ்சிபுரம்: இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை! காரணம் என்ன? தெரிந்து கொள்ளுங்கள்!
Kanchipuram Power Shutdown Today: "காஞ்சிபுரத்தில் இன்று முக்கிய இடங்களில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது"

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் சில இடங்களில், அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்தடை அறிவிப்பு.
மின்தடை
பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாடு முழுவதும், மாதத்தில் ஒரு நாள் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு மின் நிறுத்தம் செய்யும் நாள்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதேபோன்று பருவம் மழை முன்னிட்டு அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில் 230 கி.வோ. ஆரியபெரும்பாக்கம் துணைமின் நிலைய பராமரிப்பு பணியை முன்னிட்டு மின்விநியோகம் தடை அறிவிப்பு.
காஞ்சிபுரத்தில் மின்தடை
சிறுகாவேரிபாக்கம் மற்றும் வெள்ளைகேட் பிரிவில் 230 கி.வோ ஆரியபெரும்பாக்கம் துணைமின் நிலைய பராமரிப்பு பணிகளுக்காக வரும் 12.08.2025 செவ்வாய்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிபாக்கம், திம்மசமுத்திரம், கருப்படிதட்டிடை, மங்கையர்கரசி நகர், அச்சுகட்டு. ஜே.ஜே நகர். ஆரியபெரும்பாக்கம். கூரம். செம்பரம்பாக்கம். புதுப்பாக்கம். பெரியகரும்பூர். சித்தேரிமேடு., துலுக்கம் தண்டலம் ஆகிய பகுதிகளில 12.08.2025 செவ்வாய்¡கிழமை அன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம்
காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.





















