Kanchipuram Power Shutdown: காஞ்சிபுரத்தில் இன்று மின் தடை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? முழு விவரம் இதோ!
Kanchipuram Power Shutdown Today: " காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிக்கை பகுதியில் இன்று மின் தடை மேற்கொள்ளப்பட உள்ளது "

காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை துணை மின் நிலையம் பகுதியில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள பகுதிகள் என்ன ?
காஞ்சிபுரம் ஓரிக்கை துணை மின் நிலையத்தில் இன்று (09-06-2025) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது. காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதிகளான வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் தெரூ, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய்கார தெரு, டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்தி ரோடு, வேளிங்கப்பட்டரை. டி.கே.தம்பி தெரு, டெம்பிள் சிட்டி, நாகலூாத்து பகுதி. விளக்கொளி பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளிலும் இன்று மின்தடை ஏற்பட உள்ளது.
ஐயன்பேட்டை, முத்தியால் பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, சேக்கு பேட்டை வடக்கு, தெற்கு, நடுத்தெரு, ஒரிக்கை தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்கூசாபேட்டை ஆகிய பகுதிகளிலும் இன்று மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்படும் நேரம் ?
மின் தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம்: காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை.





















