TN Rain: குளுகுளுன்னு இருக்குதய்யா! சுவிட்சர்லாந்தாக மாறிய காஞ்சி, செங்கை - வானில் தோன்றிய வானவில்!
Summer Rain: கோடை காலத்தில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. உத்திரமேரூரில் வானவில் தோன்றியுள்ளது
தமிழ்நாட்டில் மே 18, 19, 20 தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் மழை - Kanchipuram Rain
செங்கல்பட்டு மாவட்ட நிலவரம்
செங்கல்பட்டு முழுவதும் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. பல்வேறு இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமான மழையும் பெய்து வருகிறது. செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனம் மேகமூட்டத்துடன் சில சமயங்களில் தூறல் மழை பெய்து வருகிறது. இதேபோன்று கூடுவாஞ்சேரி மறைமலைநகர் ஆகிய பகுதிகளிலும் விட்டுவிட்டு அவப்பொழுது மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு மழை நிலவரம்
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த 3 மணிநேரத்தில் திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2024-05-16-03:08:17 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக செய்யூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/7NA5izkwjf
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 15, 2024
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை:
நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருமருகல், பரவை, சிக்கல், கீழ்வேளூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. அதேபோல், சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார், கரிக்குளம், அம்மா சத்திரம் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 15, 2024
அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சேலம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது.
கனமழை எச்சரிக்கை - ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்:
கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. மே 19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அறிவுறுத்தியுள்ளது.
கனமழையால் சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தென்காசி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர் உட்பட 20 ஆட்சியர்களுக்கு வருவாய், பேரிடர் மேலாண்மை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
இதில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். கனமழையின்போது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் ஆட்சியர்கள் உடனே பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தர வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.