IPL 2021 Controversy : கொரோனா பாதிப்பும், ஐபிஎல் ஆட்டமும் - கட்டுரையாளர் : அரிஞ்சயவர்மன்

கொரோனாவின் நோய் தாக்கம் நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது என்பது சரியாக இருக்காது என விமர்சனம் எழுந்துள்ளது.

FOLLOW US: 

3 லட்சத்திற்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்பு, 2 ஆயிரத்தை தாண்டும் உயிரிழப்புகள். ஆக்சிஜன் பற்றாக்குறை, கள்ள சந்தையில் விற்கப்படும் ரெம்ப்டிவைசர் மருந்துகள், படுக்கைகள் இல்லா மருத்துவமனைகள், இறந்தவர்களை தகனம் செய்து இறுதி மரியாதை கூட செலுத்த இடமில்லாத சூழல்  இது தான் இந்தியாவின் இன்றைய நிலை...


IPL 2021 Controversy : கொரோனா பாதிப்பும், ஐபிஎல் ஆட்டமும்  -  கட்டுரையாளர் : அரிஞ்சயவர்மன்


இப்படி ஒட்டுமொத்த இந்தியாவே பெருந் தொற்றின் பிடியில் சிக்கி மூச்சி விட திணறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு நடுவே உற்சாகமாக மாலையில் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது ஒரு பிரமாண்டமான கிரிக்கெட் தொடர். பி.சி.சி.ஐ தவிர்த்து இந்தியாவில் வேறு ஒரு விளையாட்டு கூட்டமைப்பு இது போன்ற ஒரு விளையாட்டு தொடரை இத்தனை சோதனைகளுக்கு மத்தியில் நடத்த முடியுமா என்பது ஆச்சிரியமே ! விளையாட்டு உலகை சேர்ந்த சிலரே இதை கண்டு முகம் சுளிக்கும் நிலையும் உருவாகி இருக்கிறது. உலகின் முன்னணி விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேன் - ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் "இந்தியர்கள் அனைவருக்கும் எனது சிறந்த வாழ்த்துக்கள் - அச்சுறுத்துகிறது கொரோனா பாதிப்பு. இதற்கு நடுவே தொடரும் ஐ.பி.எல் தொடர் பொருத்தமற்றதா ? அல்லது தினசரி நம்மை திசை திருப்ப அவசியமானதா ? எதுவாயினும் உங்களுக்காக எனது பிரார்த்தனைகள்" என்று தெரிவித்துள்ளார்..


துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை வென்று பெருமை சேர்த்த அபினவ் பிந்த்ரா "கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் பயோ பப்பிள் சூழலில் இருப்பதால் முற்றிலும் காது கேளாதவர்கள் அல்லது பார்வையற்றவர்களாக வாழ்ந்துவிட முடியாது. மைதானத்திற்கு உள்ளே ஐபிஎல் தொடர் நடக்கையில், மைதானம் வெளியே ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதை கடந்து மருத்துவமனை சென்று கொண்டிருக்கின்றன. கொண்டாட்டங்களை சுருக்கிக்கொண்டு குறைந்தபட்சம் சமூகத்திற்கு மரியாதை செலுத்தவேண்டும். நாம் இக்கட்டான காலத்தில் இருக்கிறோம் என்பதை எல்லாருமே உணரவேண்டும்" என ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். ஐபிஎல் தொடருக்கு எதிரான சர்ச்சைகள் புதிதல்ல என்றாலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு இங்கே கேள்விக்கு உள்ளாகி வருகிறது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பை கண்டு ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அரசாங்கம் நம் இந்தியாவை ரெட் லிஸ்ட் செய்துள்ளனர். அதாவது இந்தியாவிலிருந்து வரவும் இந்தியாவிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..


IPL 2021 Controversy : கொரோனா பாதிப்பும், ஐபிஎல் ஆட்டமும்  -  கட்டுரையாளர் : அரிஞ்சயவர்மன்


ஐபிஎல் தொடரிலேயே அதிகபட்சமாக ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாடி வருகிறார்கள். தொடருக்கு முன் 20 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தொடருக்கு முன்பே ஜோஷ் ஹாஸல்வூட், மிட்ச் மார்ஷ், ஜோஷ் பிலிப் ஆகியோர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர். இந்த நிலையில் அன்மையில் தனிப்பட்ட காரணங்களுக்காக ஆண்ட்ரூ டை, ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஐபிஎல்-லில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனால் ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள ஆஸ்திரேலிய வீரர்களின் எண்ணிக்கை 14 ஆக சுருங்கியுள்ளது. மேலும் ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான லியம் லிவிங்ஸ்டோன், ராஜஸ்தான் அணியில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சில காரணங்களால் வீரர்கள் இன்னும் சிலர் விலகி இருப்பது, வெறும் நான்கு வெளிநாட்டு வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டு விளையாடும் நிலையை ராஜஸ்தான் அணிக்கு ஏற்படுத்தியுள்ளது. பயோ பப்பிள் என்னும் பாதுகாப்பான சூழலில் வீரர்கள் தங்க வைக்கப்பட்டு, இரண்டு நாளுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொண்டு வந்தாலும், வீரர்கள் மத்தியில் அச்சம் நிலவ துவங்கி இருப்பதை நம்மால் உணர முடிகிறது.


இது குறித்து மௌனம்  கலைத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான டேவிட் ஹஸி "ஒருவிதமான பதற்றத்தை இந்தியாவில் நிலவும் இந்த சூழல், வீரர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. தாய்நாட்டிற்கு திரும்ப முடியாத சூழல் வந்து விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது" என மனம் திறந்துள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கிறிஸ் லின் ஐபிஎல் தொடர் முடிவடைந்தவுடன் தனி விமானம் மூலம் தங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.


இப்படி இருக்கையில் சென்னை மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் சுற்று போட்டிகள் நிறைவடைந்த கையோடு, டெல்லி கேப்பிடல் அணியில் இருந்து விலகி இருக்கிறார் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வின் பகிர்ந்துள்ள கீச்சில் "இந்தாண்டு ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்கிறேன், எனது குடும்பம் கொரோனவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக உடன் இருக்க விரும்புகிறேன், நிலைமை சரியானால் மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்புவேன்" என பதிவிட்டுள்ளார்... இப்படி ஐபிஎல் போட்டியை சர்ச்சைகள் சூழ, தொலைக்காட்சியை பார்த்தாலே அச்சுறுத்தும் தகவல்கள் மட்டுமே வெளிவரும் காலச்சூழலில், ஏதோ ஒரு வகையில் மக்களை இதிலிருந்து திசை திருப்பி, மனதிற்கு சற்று உற்சாகத்தை ஏற்படுத்தும் ஐபிஎல் போட்டிகளை முற்றிலுமாக எதிர்க்க வேண்டாமே என்ற ஆதரவு குரல்களும் நீள்கின்றன.


இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளை தொடக்கம் முதலே சந்தித்துள்ள ஐபிஎல் தொடருக்கு, மீண்டும் அதன் வரலாற்றில் மிக முக்கியமானதொரு சர்ச்சையை காலம் உருவாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் இம்முறை இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்...

Tags: IPL CSK ipl 2021 STOP IPL

தொடர்புடைய செய்திகள்

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

பி.இ., பி.எல் படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு? - நீதிபதி முருகேசன் ஆணையம் அமைப்பு

கோவை : 1563 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு

கோவை : 1563 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

டாஸ்மாக் உருவான வரலாறு : மது நுழைந்த காரணமும் அதனால் ஏற்பட்ட ரணமும்..!

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுக்குள் வருமா கொரோனா தொற்று?

காஞ்சிபுரம் : செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுக்குள் வருமா கொரோனா தொற்று?

திருவாரூர் : ஒரே நாளில் 170 நபர்களுக்கு கொரோனா தொற்று..!

திருவாரூர் : ஒரே நாளில் 170 நபர்களுக்கு கொரோனா தொற்று..!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!