மேலும் அறிய

Yuzvendra Chahal: போதும்டா சாமி..! சாஹல் போட்ட பதிவு, மனைவி தனஸ்ரீ வர்மாவிடம் இருந்து விவாகரத்து? காரணம் என்ன?

Yuzvendra Chahal: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி, தனஸ்ரீ வர்மாவிடமிருந்து விவாகரத்து பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Yuzvendra Chahal: இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் விவாகரத்து பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

யுஸ்வேந்திரா சாஹல் போட்ட பதிவு:

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், தனது மனைவி தனஸ்ரீ வர்மாவிடமிருந்து விவாகரத்து பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் பல மாதங்களாகவே பிரிந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சாஹல் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில், “கடின உழைப்பு மக்களின் குணாதிசயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. உங்கள் பயணம் உங்களுக்குத் தெரியும். உங்கள் வலிகள் உங்களுக்குத் தெரியும். இங்கு வருவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். உலகுக்குத் தெரியும். நீங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறீர்கள். உங்கள் வியர்வை சிந்தி உழைத்தீர்கள். உங்கள் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்துங்கள், எப்போதும் ஒரு பெருமைமிக்க மகனைப் போல நிமிர்ந்து நிற்கவும்” என சாஹல் குறிப்பிட்டுள்ளார். இந்த உணர்ச்சிகரமான பதிவு விவாகரத்து செய்திகளுக்கு மத்தியில் வெளியாகி, ஊகங்களை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சாஹலும் தனஸ்ரீயும் பிரிந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து:

சாஹல் மற்றும் தனஸ்ரீ இருவரும் டிசம்பர் 2020 இல் குர்கானில், குடும்பத்தினர் சூழ திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் காதல் கதை கொரோனா தொற்றின் போது தொடங்கியது. பல் மருத்துவராக இருந்தபோதும், நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் நடனப்பள்ளி ஒன்றையும் தனஸ்ரீ நடத்தி வருகிறார். அதுதொடர்பான வீடியோக்களை கண்டு, நடனம் பயில சென்றபோது சாஹல் மற்றும் தனஸ்ரீ இடையே காதல் மலர்ந்தது. குறைந்த காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இந்த ஜோடி, சமூக வலைதளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு கவனத்தை ஈர்த்தது. இந்த சூழலில் தான், இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்துள்ளனர். மேலும், சாஹல் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் இருந்து டெலிட் செய்துள்ளார். இதனால், இருவரும் விவாகரத்து பெறுவது உறுதி என கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த 2023ம் ஆண்டும் இந்த ஜோடி பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இன்ஸ்டாகிராமில் தனது பெயரிலிருந்து சாஹல் என்பதை நீக்கினார். ஆனால், அந்த வதந்திகளை நிராகரித்த சாஹல்,  சரிபார்க்கப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என்று ரசிகர்களை வலியுறுத்தினார்.

சொத்து மதிப்பு:

மாடல், பல் மருத்துவர் மற்றும் நடன ஆசிரியராக உள்ள தனஸ்ரீ வர்மாவின் சொத்து மதிப்பு சுமார் 24 கோடி என கூறப்படுகிறது. அதேநேரம், ஐபிஎல் உள்ளிட்டவை மூலம் ஆண்டுக்கு சுமார் 7 முதல் 9 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும், சாஹலின் சொத்து மதிப்பு சுமார் 70 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget