10 மோசமான விமான நிறுவனங்கள்

Published by: ABP NADU

Airhelp Score Report என்பது ஒருவகை மதிப்பீட்டு அறிக்கை. மக்களின் கருத்து, வருகை நேரம் போன்றவற்றை வைத்து விமான நிறுவனங்கள் தரவரிசை படுத்தப்படுகிறது.

10. Sky Express, Greece

அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இருந்தும் நேரம் தவராமையை கடைபிடிக்காததால் 4.86 மதிபெண்கள் கிடைத்தது.

9. Air Mauritius, Mauritius

அதிக வாடிக்கையாளர்களை கொண்டாலும் சில காரணங்களுக்காக 4.84 மதிப்பெண்கள் கிடைத்தது.

8. TAROM, Romania

நேரத்தை கடைப்பிடிக்காமையால் சேவை தரம் குறைவதாக கூறப்படுகிறது. இதற்கு கொடுக்கப்பட்ட மதிப்பெண் 4.82.

7. Indigo, India

புகழ்பெற்ற விமான நிறுவனம். இருந்தும் அதன் தாமதமான உரிமைகோரல் செயலாக்கத்தால் 4.80 மதிப்பெண்கள் கிடைத்துள்ளது.

6. Pegasus Airline, Turkey

உரிமைகோரல் செயலாக்கம் மிகவும் தாமதமாக உள்ளதாக கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட மதிப்பெண் 4.73.

5. EL AL Israel Airlines, Israel

ஒட்டுமொத்தமாக இந்த விமான நிறுவனத்தின் சேவை தரமற்றதாக கூறப்படுகிறது. இதற்கு கொடுக்கப்பட்ட மதிப்பெண் 4.60.

4. Bulgaria Air, Bulgaria

வாடிக்கையாளர்களின் கருத்து அடிப்படையிலும் நேரம் கடைபிடிப்பதன் அடிப்படையிலும் 4.59 மதிபெண்கள் கொடுக்கப்பட்டது. தரமற்ற சேவையாக கூறப்படுகிறது.

3. Nouvelair, Tunisia

வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துகிறது. இருந்தும் தரமற்ற சேவை தரும் விமான நிறுவனமென கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட மதிப்பெண் 4.48.

2. Buzz, Poland

தாமதமான உரிமைகோரல் செயலாக்கத்திற்காக 4.45 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டது.

1. Tunisair, Tunisia

1948-ல் உருவாக்கப்பட்ட விமான நிறுவனம். 2024-ன் மோசமான விமான நிறுவனங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் 3.63.