மேலும் அறிய

Temple For CM Jagan: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.2 கோடி செலவில் கோயில்..!

ஆரம்பத்தில், இந்த நவரதன்லு கோயிலுக்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிடப்பட்டிருந்தாலும், பின்னர் சுமார் 2 கோடியாக செலவு அதிகரித்தது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அந்தக் கட்சியின் எம்எல்ஏ ஒருவர் 2 கோடி ரூபாய்  மதிப்பில் திருப்பதி அருகே கோயில் கட்டியுள்ளார்.

காளஹஸ்தியை சேர்ந்த எம்எல்ஏ மதுசூதனன் ரெட்டி  சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே ஒரு கோயிலுடன் கூடிய அருங்காட்சியகத்தை கட்டியுள்ளார். ஆந்திராவில் செயல்படுத்தப்படும் ஒன்பது நலத்திட்டங்களை பிரதிபலிக்கும் விதமாக கட்டப்பட்ட கோயில், நவரத்தினங்கள் கொண்ட கண்ணாடி மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கோயிலில் கண்ணாடி மண்டபம் கட்டப்பட்டு, வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஆர் சிலை நிறுவப்பட்டது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில நிபுணர்களை கொண்டு கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்காக எம்எல்ஏ தனது நிதியை பயன்படுத்தியும், தலைவர்களிடமிருந்தும், கட்சியினரிடமிருந்தும் பணத்தை சேகரித்துள்ளார்.

Temple For CM Jagan: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.2 கோடி செலவில் கோயில்..!

தொடக்கத்தில், இந்தக் கோயிலை கட்டுவதற்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் சுமார் 2 கோடியாக செலவு அதிகரித்தது. மேலும், இந்த கோயிலின் பின்னால் கட்டப்பட்ட ஜகன்னா ஹவுசிங் காலனியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Afghanistan Taliban Crisis: விமானத்தின் டயரில் அமர்ந்து தப்பிக்க துடிக்கும் மக்கள் : ஆஃப்கனின் அதிர்ச்சி வீடியோக்கள்

நவரத்தினங்கள் திட்டங்கள் மூலம் நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஆதரவை வழங்குவதன் மூலம் ஏழைகளை உயர்த்த அரசு தீர்மானித்துள்ளது. எனவே இந்தக் கோயிலுக்கு “நவரதன்லு ஆலயம்” என்று பெயரிடப்பட்டதாக எம்எல்ஏ கூறினார்.

Temple For CM Jagan: ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ரூ.2 கோடி செலவில் கோயில்..!

இந்தக் கோயிலில் ஒன்பது தூண்கள் உள்ளன. அவை முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை சித்தரிக்கின்றன.  எம்எல்ஏ தனது நிதியில் சுமார் 75 சதவிகிதத்தை செலவழித்து, மீதித்தொகையை கட்சியினரிடமிருந்து பெற்று கோயிலை கட்டினார். இந்தக் கோயிலுக்கு வருவோருக்கு ஜெகன்மோகன் ரெட்டி செய்த நலத்திட்டங்கள் குறித்த கையடக்க பிரதிகள் அளிக்கப்படுகின்றன. ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நவரத்னலு திட்டம் குறித்த படங்கள் வைக்கபட்டு உள்ளன. முதல்வரின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் உள்ள உண்டியில் பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, மக்கள் தங்கள் வேண்டுகோள்களையும் குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம்.

துணை முதல்வர் கே.நாராயண சுவாமி, பெதிரெட்டி ராமச்சந்திர ரெட்டி மற்றும் மிதுன் ரெட்டி ஆகியோர் நேற்று இந்தக் கோயிலைத் திறந்து வைத்தனர். இது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டிக்கு விரைவில் அர்ப்பணிக்கப்பட உள்ளது.

LPG Price hike : சமையல் எரிவாயு விலை கிடுகிடு உயர்வு...ரூ.25 அதிகரிப்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
India vs England Match Highlights: டி20 உலகக் கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.. இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget