World Leaders and Official Cars: உலக தலைவர்களின் official கார்கள் - பிரதமர் மோடியின் Maybach முதல் பைடனின் Beast வரை..!
பிரதமருக்கான இந்தியாவின் Maybach காரை தவிர, பல உலகத் தலைவர்கள் உலகின் பாதுகாப்பான வாகனங்களில் சிலவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
பிரதமர் மோடியின் சமீபத்திய Mercedes-Maybach S650 கார் முதல் அமெரிக்க அதிபரின் 'The Beast' வரை, உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களுக்குப் பயன்படுத்தப்படும் சில பாதுகாப்பான கார்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியப் பிரதமருக்கு நெருக்கமான பாதுகாப்பை வழங்கும் SPG என்ற சிறப்புப் பாதுகாப்புக் குழு சமீபத்தில், BMW 7-சீரிஸ்க்கு பதிலாக பிரதமரின் அணிவகுப்பில் Mercedes-Maybach S650 காரை சேர்த்துள்ளது. 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்ட Maybach S650 இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த உற்பத்தி கவச வாகனங்களில் ஒன்றாகும். இது ஒரு தயாரிப்பு காரில் வழங்கப்படும் மிக உயர்ந்த பாதுகாப்பாகும்.
பிரதமருக்கான இந்தியாவின் Maybach காரை தவிர, பல உலகத் தலைவர்கள் உலகின் பாதுகாப்பான வாகனங்களில் சிலவற்றைப் பயன்படுத்துகின்றனர். அதில் முக்கியமானது 'The Beast'. இது அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ காராகப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் பயன்படுத்தும் இந்த கார்களில் சிலவற்றைப் பாருங்கள்.
நரேந்திர மோடி (இந்தியா) - Mercedes-Maybach S650 Guard
பிரதமர் நரேந்திர மோடியின் புதிய Mercedes-Maybach S650 எஸ்பிஜி என்ற சிறப்பு பாதுகாப்புக் குழுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கவச கார் ஆகும். பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி, புதிய பென்ஸ் ரக கார் மாற்றப்பட்டுள்ளது. பிரதமர் முன்பு பயன்படுத்திய பிஎம்டபிள்யூ ரக கார்கள் இப்போது தயாரிக்கப்படுவதில்லை.
போரிஸ் ஜான்சன் (இங்கிலாந்து) - Jaguar XJ ‘The Sentinel’
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்தியாவின் டாடா குழுமத்திற்கு சொந்தமான இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஜேஎல்ஆர் குழுமத்தால் தயாரிக்கப்பட்ட ‘தி சென்டினல்’ எனப்படும் Jaguar XJ காரை பயன்படுத்துகிறார். சென்டினல் 15 கிலோகிராம் டிஎன்டிக்கு சமமான குண்டுவெடிப்பு மற்றும் நெருங்கிய தூர துப்பாக்கி மற்றும் கையெறி குண்டு தாக்குதல்களைத் தாங்கும். பயணிகளின் வசதிக்காக பின்புற மசாஜ் இருக்கைகளையும் கொண்டுள்ளது.
விளாடிமிர் புடின் (ரஷ்யா) - Aurus Senat
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் Aurus Senat என்ற ரஷ்ய தயாரிப்பான லிமோசைனைப் பயன்படுத்தத் தொடங்கினார். 17 அடி நீளமுள்ள இந்த கார் ரஷ்ய சொகுசு கார் பிராண்டான NAMI ஆல் தயாரிக்கப்பட்டது. 600bhp ஆற்றலை வெளிப்படுத்தும் இது, 4.4 லிட்டர் V8 ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
கிம் ஜாங் உன் (வட கொரியா) - Mercedes-Maybach S600 Pullman Guard
ஆடம்பரப் பொருட்கள் மீதான தடைகள் இருந்தபோதிலும், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், 21 அடி நீளமுள்ள மற்றும் 15 கிலோ டிஎன்டி வெடிப்பைத் தாங்கக்கூடிய Mercedes-Maybach S600 புல்மேன் கார்டு லிமோசைனைப் பயன்படுத்துகிறார். வடகொரியாவின் உச்ச தலைவர் ரஷ்யாவிலிருந்து இரண்டு கார்களை கடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஷி ஜின் பிங் (சீனா) - Hongqi N501 'The Red Flag'
அரசுக்கு சொந்தமான Hongqi N501 என்பது ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ வாகனம் ஆகும். இது கம்யூனிஸ்ட் கட்சியின் பாரம்பரிய சின்னமான "சிவப்பு கொடி" என்று பொருள்படும். இந்த கார் FAW ஆல் தயாரிக்கப்பட்டது. நீண்ட காலமாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளுக்கான அதிகாரப்பூர்வ வாகனமாக இருந்து வருகிறது. ஆடி A8L இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கார் பொதுமக்களுக்கு விற்பனைக்கு இல்லை.
ஜோ பைடன் (அமெரிக்கா) - Cadillac One 'The Beast'
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி கார் 'The Beast' என்றும் அழைக்கப்படும் adillac One பற்றி அறிமுகம் தேவையில்லை. இது உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கார்கள் மற்றும் பெரும்பாலும் உலகின் பாதுகாப்பான வாகனமாக கருதப்படுகிறது. பீஸ்ட் 9,000 கிலோ (20,000 பவுண்டுகள்) எடைகொண்டது. தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் ஊடுருவ முடியாதபடி 8 அங்குல தடிமனான கவசத்தைக் கொண்டுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்