விரைவில் வருகிறது பெண்களுக்கான வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டம்...இலக்கை நிர்ணயித்த அரசு..
பெண் ஊழியர்களை முன்னேற்றும் விதமாக, அம்மாநில அரசு சனிக்கிழமையன்று அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெண் ஊழியர்களை முன்னேற்றும் விதமாக, அம்மாநில அரசு சனிக்கிழமையன்று அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் அரசின் மூத்த அலுவலர் ஒருவர் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கடந்த பட்ஜெட்டின் போது வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அசோக் கெலாட் வெளியிட்டார். இதை செயல்படுத்த, மாநில அரசு mahilawfh.rajasthan.gov.in என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது" என்றார்.
பணிபுரியும் பெண் ஊழியர்கள் இந்த இணையதளத்தில் ஜனதார் கார்டு மூலம் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அவர்களின் பணிக்கான உதவி தொகையோ அல்லது சம்பளத்தை துறையோ அல்லது நிறுவனமோ தீர்மானிக்கும். மாநில அரசின் வெளியிட்ட செய்தியின்படி, 20 சதவீத பெண்களை சேர்க்கும் நிறுவனங்களுக்கு ராஜஸ்தான் அரசு நிதியுதவி அளிக்கும்.
வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்திற்காக, ராஜஸ்தான் அரசு 100 கோடி ரூபாயை பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. ஆறு மாதங்களில் சுமார் 20,000 பெண்களுக்கு வேலை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை, 150க்கும் மேற்பட்ட பெண்களும், 9 நிறுவனங்களும் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. இதன்காரணமாக பல பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. எனினும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்யும் முறையை அளித்திருந்தனர். இதன்காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி செய்து வருகின்றனர்.
இந்த வேர்க் ஃப்ரம் ஹோம் தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவுனர் நாராயண மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “என்னைப் பொறுத்தவரை வொர்க் ஃபரம் ஹோம் என்பது எப்போதும் பிடிக்காத ஒன்று. இதனால் நிறுவனத்தின் சிரதன்மை விரைவாக சிதைவு அடைந்துவிடும். ஏனென்றால் அனைவரும் வீட்டில் வேலை பார்ப்பதால் கடின உழைப்பு, ஊழியர்களுக்கு இடையே இருக்கும் உறவு, உரையாடல் ஆகியவை முற்றிலும் தடைப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்தியா மாதிரியான நாடுகளில் இந்த முறை எப்போதும் சரியாக இருக்காது. இங்கு ஒவ்வொரு இடங்களில் இணையதள சேவையின் வேகமாக சரியாக இல்லை. மேலும் பலருக்கு தங்களுடைய வீடுகளில் அலுவலகம் போல் வேலை செய்யும் வசதியும் இல்லை. ஆன்லைன் கல்வி குழந்தைகளின் மீது எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோல் தான் இளைஞர்கள் மீது இந்த வொர்க் ஃபர்ம் ஹோம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் தங்களுடை வேலையில் எந்தவித புதிய விஷயங்களை கற்று கொள்ளாமல் இருந்து வருகின்றனர்" என்றார்.