ரெட்டை கதிரே.! இரண்டு தலை.. மூன்று கைகள்.. மத்தியப் பிரதேசத்தில் பிறந்த ஆச்சரிய குழந்தை..!
மத்திய பிரதேசத்தில் இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் அதிசய குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
உலகில் பிரசவத்தின்போது குழந்தைகள் ஒட்டிப்பிறப்பது. இரட்டைக் குழந்தைகளும் தலைகள் ஒன்றுடன் ஒன்றாக பிறப்பது போன்ற வினோதங்கள் அவ்வப்போது நிகழ்வு வழக்கம். இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் பிறந்த குழந்தை ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிறந்த குழந்தை இரண்டு தலைகள், மூன்று கைகள் மட்டும், இரண்டு கால்களுடன் பிறந்துள்ளது. இதனால், குழந்தைக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் உள்பட மருத்துவ குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த குழந்தை பிறந்தது தொடர்பாக பேசிய மருத்துவர் ப்ரஜேஸ் லகோதி கூறியதாவது, இந்த தம்பதியினருக்கு பிறந்த குழந்தை இதுதான். குழந்தை வயிற்றில் இருக்கும்போது நடத்திய மருத்துவ பரிசோதனையில் இரண்டு குழந்தைகள் இருப்பது போன்று தெரிந்தது. இது மிகவும் அரிதான ஒன்றாகும். இந்த குழந்தைக்கு இரண்டு முதுகெலும்பு தண்டு உள்ளது. ஒரே வயிறு உள்ளது. குழந்தை மூன்று கிலோ எடையில் உள்ளது.
Woman in MP's Ratlam gives birth to child with two heads, three arms
— ANI Digital (@ani_digital) March 31, 2022
Read @ANI Story | https://t.co/uVAQawI957 pic.twitter.com/zqAsVTcSIZ
மிகவும் அரிதாக பிறந்துள்ள இந்த குழந்தை ஐ.சி.யூ. வார்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு அடுத்து மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து மருத்துவ குழுவினர் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தங்களுக்கு பிறந்த குழந்தையே முதல் குழந்தையை இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் பிறந்தது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. அதேசமயத்தில், அரிதாக பிறந்துள்ள இந்த குழந்தையை பார்ப்பதற்காகவும் மருத்துவமனை முன்பு மக்கள் கூடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Crime: காதலிப்பதாக கூறி டின்னருக்கு அழைத்து கொடூரம்.. செவிலியர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை..
மேலும் படிக்க : Vanniyar Reservation: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுத்தது செல்லாது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்