Hyderabad: வாட்ஸ் அப்பில் மரண செய்தி! ஓடிச்சென்ற காதலன்! மர்மமாக இறந்த இளம்பெண்!
ஹைதராபாத்தில் தங்கி அமேசான் நிறுவனத்தில் வேலை செய்துவந்த பெண் ஒருவர் தனது பிளாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பெண் ஐடி ஊழியர் ஹைதராபாத்தில் தனது பிளாட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 வயதான இந்த பெண் ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் இந்தி வந்துள்ளார். ஹைதராபாத்தில் தங்கியிருந்த அவர் அமேசான் நிறுவனத்தில் பணி புரிந்துள்ளார். கச்சிபௌலி சைபராபாத் காவல்துறையினர் கூறியுள்ளது படி, தற்கொலை செய்துகொள்ளப்பட்ட பின்னர், அவர் தனது நண்பர் சச்சின் குமார் மூலம் சன்ஷைன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு இருந்த மருத்துவ அதிகாரிகள், அவரை பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
நடந்த சம்பவம்
ஹைதராபாத்தில் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக, தனது ஆண் நண்பர் ஒருவருக்கு தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. செய்தியை பார்த்த நபர் அதிர்ந்துபோய் அவரது அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து சென்று பார்த்துள்ளார். ஆனால் அவரது வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார். அவர் அவரது ரூம்மேட்டை அழைத்து சாவியை கொண்டு வர சொல்லி உள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு
அவரது ரூம் மேட் வந்ததும் வேறு சாவியை கொண்டு பிளாட்டைத் திறந்துள்ளனர். அப்போது அந்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் இருவரும் கண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட பெண் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மற்ற இரண்டு பெண்களுடன் சாகர் கார்டேனியா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது பெற்றோர்கள் ஜம்மு காஷ்மீரில் வசிக்கின்றனர்.
போலீசார் விசாரணை
மேலும் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக சிஆர்பிசி பிரிவு 174ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தற்கொலைதானா என்ற ரீதியில் விசாரணை துவங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலதிக தகவல்கள், ஏன் தற்கொலை செய்துகொண்டார் போன்ற விபரங்கள் எல்லாம் விசாரணைக்கு பிறகே தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்