Watch Video: ரகிட... ரகிட... அசால்ட்டாக லாரி ஓட்டும் பெண்: ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!
பெண் ஒருவர் அசால்ட்டாக லாரி ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
![Watch Video: ரகிட... ரகிட... அசால்ட்டாக லாரி ஓட்டும் பெண்: ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்! woman drive truck effortlessly internet calls it inspirational Watch Video: ரகிட... ரகிட... அசால்ட்டாக லாரி ஓட்டும் பெண்: ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/3fc63f2d202e37febc21bff68c8226071658137043_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பணிகளிலும் ஆண்கள் சார்ந்த பணிகள், பெண்களுக்கு உகந்த பணிகள் என இடைவெளி இன்றளவும் ஒரு பக்கம் தொடர்ந்து வந்தாலும், மறுபக்கம் பெண்கள் அனைத்துப் பணிகளிலும் சமரசமின்றி நுழைந்து பலரையும் உத்வேகப்படுத்தியே வருகின்றனர்.
புன்னகையுடன் ட்ரக் ஓட்டும் பெண்
அந்த வகையில் பெண் ஒருவர் அசால்ட்டாக ட்ரக் ஓட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவினாஷ் ஷரன் எனும் ஐஏஎஸ் அலுவலர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, 1,94,000 பார்வையாளர்களையும், 11 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
ट्रक को इससे क्या मतलब कि चलाने वाला ‘पुरुष’ है या ‘महिला.’ ❤️ pic.twitter.com/g9IEAocv7p
— Awanish Sharan (@AwanishSharan) July 17, 2022
கேமராவைப் பார்த்து புன்னகை செய்தபடி அசால்ட்டாக பெண் லாரி ஓட்டும் இந்தக் காட்சியை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அவினாஷ் ஷரன்
ஐஏஎஸ் அலுவலர் அவினாஷ் ஷரன் தொடர்ந்து இதுபோன்ற சுவாரஸ்யமான வீடியோக்கள், பதிவுகள் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். முன்னதாக அவினாஷ் தன் 10ஆவது மார்க் ஷீட்டை பகிர்ந்துள்ளார்.
1996ஆம் ஆண்டு பிகார் மாவட்ட பள்ளித் தேர்வில் தன் பத்தாம் வகுப்பில் 44.85 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்ததை இவர் பகிர்ந்துள்ள நிலையில், இதனைத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், பள்ளித் தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ள அவினாஷ் ஐஏஎஸ் அலுவலராக உருவெடுத்துள்ளது அவரைப் பின்தொடரும் நெட்டிசன்களுக்கு உத்வேகமாய் அமைந்துள்ளது.
மேலும் படிக்க: Viral news: கொளுத்துற வெயிலுக்கு ஏசி தியேட்டரில் இலவசம்.. ஆனால் முடி கலர் முக்கியம் - வித்தியாச அறிவிப்பு!
Srilanka Food Shortage: இலங்கையில் உணவு பற்றாக்குறையால் தவிக்கும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்.. உலக உணவுத்திட்ட அமைப்பு அறிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)