Wife Name Change: கணவரின் அனுமதியின்றி மனைவி பெயரை மாற்ற முடியாதா? அமைச்சகம் கூறியது என்ன?
Wife Name Change: திருமணமான பெண், பெயரை மாற்றியமைக்க கணவரின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திருமணமான பெண், தனது கணவரின் குடும்பப்பெயரை ( surname ) கைவிட வேண்டும் அல்லது அவர்கள் திருமணத்திற்கு முன்பு இருந்த இயற்பெயரையே வைக்க வேண்டும் என்றால் கணவரிடமிருந்து தடையில்லா சான்றிதழ்( No Objection Certificate ) அல்லது கணவரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகம் பதில் :
மாநிலங்களவை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோக்லே இன்று, பாராளுமன்றத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பதிலைப் பகிர்ந்து கொண்டார். அதில், திருமணமான பெண், தனது கணவரின் குடும்பப்பெயரை கைவிட வேண்டும் அல்லது திருமணத்திற்கு முன்பு இருந்த பெயரையே வைக்க வேண்டும் என்றால் கணவரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் அல்லது கணவரிடம் அனுமதி பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது பெண்கள் மீதான வெறுப்பு என இது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அரசாங்கத்தை கடுமையாக சாடினார் கூறினார்.
”பெண்கள் மீதான வெறுப்பு”
"இது மோடி அரசாங்கத்தின் பாலின வெறுப்பு மற்றும் பெண் வெறுப்பின் ஒரு புதிய நிலை. பெண்கள் தங்களது பழைய பெயருக்கு திரும்ப விரும்பினால் "என்ஓசி அல்லது கணவரிடம் அனுமதி" பெறுவதை கட்டாயமாக்கும் விதியை ஏன் கொண்டுவந்தீர்கள்.
ஆட்சேபனைகள் அல்லது சட்டரீதியான விளைவுகளைத் தெரிந்து கொள்ளவும், கணவருக்கு தெரிவிக்கும் நோக்கத்திற்காக கட்டாயமாக்கியதாக தெரிவிக்கிறார்கள். இந்த விளக்கம் அர்த்தமற்றதாக உள்ளது . கெசட்டில் பெயர் மாற்றம் "அறிவிக்கப்படும்" போது, அது தானாகவே மனைவிக்கு "அறிவிக்கப்படும்".
”தெளிவான பதில் இல்லை”
ஒரு பெண் தன் பெயரை மாற்றிக்கொள்ள கணவனின் "அனுமதி" ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு தெளிவான பதில் இல்லை" என்று கோக்லே தெரிவித்துள்ளார்.
This is a whole new level of shameless sexism & misogyny by the Modi Govt
— Saket Gokhale MP (@SaketGokhale) July 30, 2024
I asked the Govt in Parliament as to why a rule was introduced making it compulsory for women to get "NOC or permission from husband" if they wish to revert to their maiden name.
Govt's justification?… pic.twitter.com/5zXWJ3ZBtq
இந்திய அரசிதழில் பெயர் மாற்றத்தை அறிவிப்பதற்கு முன், கணவரிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் தேவையில்லை என சான்றிதழ் பெறுவதற்கான காரணம் என்பது, பெயரை மாற்றுவதில் கணவருக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளதா என்பதற்காகவும் மேலும் ஏதேனும் சட்டரீதியாக ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்கும் என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: "சாதி பற்றி தெரியாதவர்" ராகுல் காந்தி குறித்து பாஜக எம்பி சர்ச்சை கருத்து.. கொந்தளித்த மக்களவை!