வெங்காயம் விலை உயர்கிறதா.. காரணம் என்ன? ஷாக்கான மக்கள்!
வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு நேற்று திரும்பப் பெற்றது. இதன் காரணமாக, உள்ளூரில் விற்கப்படும் வெங்காயத்தின் விலை உயரலாம் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் விதிக்கப்பட்ட வெங்காய ஏற்றுமதி மீதான 20 சதவீத வரியை மத்திய அரசு நேற்று திரும்பப் பெற்றது. இதன் காரணமாக, உள்ளூரில் விற்கப்படும் வெங்காயத்தின் விலை உயரலாம் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
வெங்காயத்தின் விலை உயர்கிறதா?
உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயராமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஏற்றுமதி செய்வதில் கட்டுப்பாடு விதிக்க ஏற்றுமதி வரி, குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (MEP) போன்றவை விதிக்கப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 2024ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி வரை, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2024ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 முதல் வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரி 20 சதவீதமாக வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில், வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதனால், உள்ளூரில் விற்கப்படும் வெங்காயத்தின் விலை உயரலாம் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
முன்னதாக ஏற்றுமதிக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் மொத்த வெங்காய ஏற்றுமதி 17.17 லட்சம் டன்னாகவும், 2024-25 ஆம் ஆண்டில் (மார்ச் 18 வரை) 11.65 லட்சம் டன்னாகவும் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
காரணம் என்ன?
கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் 0.72 லட்சம் டன்னாக இருந்த மாதாந்திர வெங்காய ஏற்றுமதி அளவு, 2025 ஜனவரியில் 1.85 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ராபி பருவத்தில் நல்ல அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டதை தொடர்ந்து மண்டி மற்றும் சில்லறை விலைகள் இரண்டும் குறைந்து வரும் இந்த முக்கியமான கட்டத்தில், விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதிலும், நுகர்வோருக்கு வெங்காயத்தின் மலிவு விலையைப் பராமரிப்பதிலும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இந்த முடிவு மற்றொரு சான்றாகும்" என குறிப்பிட்டுள்ளது.
அதேபோல், அகில இந்திய சராசரி சில்லறை வெங்காய விலை கடந்த ஒரு மாதத்தில் 10 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவின் மொத்த வெங்காய உற்பத்தியில் 70-75 சதவீதம் ராபி பருவத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. காரீப் பருவமான அக்டோபர்/நவம்பர் வரும் வரை அனைவருக்கும் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் விலையில் நிலைத்தன்மையை உறுதி செய்வதிலும் ராபி பருவ உற்பத்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

